இன்சொல் பதிப்பகம் வெளியிட்ட எனது கவிதைப் புத்தகங்களான 'உயர்திணைப் பறவை', 'ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்', 'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்' ஆகியவற்றின் விற்பனை உரிமை டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிறைய புதிய வாசகர்கள் டிஸ்கவரி மூலம் எனக்குக் கிடைத்தார்கள். காசு கொடுத்து புத்தகம் வாங்கியதும் அவர்களே. பழையவர்களுக்கு என் விருப்பத்தின் பேரிலும் அவர்கள் விருப்பத்தின் பேரிலும் முறையே கொடுக்கப்பட்டன; அனுப்பிவைக்கப்பட்டன. நிற்க...
குறைந்த பிரதிகள் அச்சிடப்பட்டன என்றாலும் அவை நிறைவாக விற்பனையாகி இருக்கின்றன என்று சொன்னார் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன். கூடவே ஒரு குறிப்பிட்ட தொகையை விற்பனைத் தொகையாகவும் கையளித்திருக்கிறார். அந்தக் காசோலையைப் பெறும்போது எழுதி சம்பாதித்த தொகை இது என்ற மகிழ்ச்சி, பெருமிதம் இருக்கவே செய்கிறது. வங்கியில் டெப்பாசிட் செய்துவிட்டு வந்திருக்கிறேன்.
சரி, இப்போது முக்கியமான செய்திக்கு வருகிறேன்... 44_வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மேற்கண்ட எனது மூன்று புத்தகங்களும் மார்ச் 1_ம் நாள் முதல் டிஸ்கவரியில் கிடைக்கும். வேறு எந்த ஸ்டாலில் கிடைத்தாலும் அது டிஸ்கவரி மூலம் சென்றதாக இருக்கும். தேவைப்படுவோர் வாங்கிப் படிக்கலாம்.
இந்த ஆண்டு இறுதியில் இரண்டு தொகுப்புகள் இன்சொல் வெளியீடாக வெளிவர இருக்கின்றன. அவை என்னென்ன என்ற விவரத்தை உரிய நேரத்தில் அறிவிப்போம். உடன் நிற்கும் அத்துணை நண்பர்களுக்கும் ஈர நன்றி.
டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் மு.வேடியப்பன் |
No comments:
Post a Comment