23 September, 2024

அறிமுகம் ~ உயர்திணைப் பறவை ~ கவிஞர் சோலை மாயவன்

விஞர் அம்சப்ரியா வாசிக்க சொல்லி கொடுத்தார்

கவிஞர்.கதிர்பாரதி அவர்களின்
உயர்திணைப்பறவை தொகுப்பில் இருந்து
இரண்டு கவிதைகள்
1.
வயலில் கால்கள் புதிய
நாற்றுநடும் அம்மாவைப் பார்த்திருக்கிறேன்
தன்னைப் பிய்த்துப் பிய்த்துச்
சேற்றில் ஊன்றுவாள்
பின்னொரு பருவத்தில்
அவள் உடலை அறுவடைசெய்து
பசியாறுவோம்
2
பால்குடி மறக்க
கற்றாழைச் சாற்றைக் காம்பில் இழுவி
முலை ஈந்த அம்மா
வாழ்வின் முதற்கசப்பையும்
உன் உடலில் இருந்தே
அருந்தப்பெற்றேன் என்பதையாவதெ
சொல்லிவிடுகிறேன்
தனது உயர்திணைப்பறவை தொகுப்பில் அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது என் தலைப்பில் அம்மாவை பற்றி 30சித்திரங்களை உருவாக்கி உள்ளார் ஒவ்வொன்றிலும் வகைவகையான உணர்வுகள்
இதற்கு மேல் கவிதைத் தொகுப்பு வாசிக்க முடியமால் அம்மாவின் பின்னே அலைந்துக்கொண்டிருந்தது என் பால்ய காலம்
நாளை தான் மீண்டும் வாசிக்க வேண்டும்
வாழ்த்துகள் கதிர்பாரதி சார்

No comments: