கதிர்பாரதியின் கவிதைகள் நரகத்தில் இருந்து ஒரு சொல் எடுத்து, சொர்க்கத்தின் நறுமணம் தடவி நம்முன் நடனமாடி சிரிக்கின்றன. எருக்கம்விளாரால் விளாசிய வலி மீறிசிரிக்கும் அம்மாவிடம் சுருட்டைக் கொடுத்து புகைக்கச் சொல்கிற இவனது கருணை முன்பு, மண்டியிட்டு கண்கள் மூடுகிறேன். கதிர்பாரதி கவிதையின் முதல் வரியை எழுதுகிறான்,அதன் பிறகு அதனோடு என்னை ஒப்புக்கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அரிசிமா சிக்குக்கோலத்தில் தன்னையே கிள்ளிவைக்கும் எஸ்தர் அத்தையின் பரிசுத்தக் காதலை எப்படி எல்லாம் எழுதிவிடு கிறான். கதிர்பாரதியின் எளிமையான மொழிதல் முறை இந்தக் கவிதைத் தொகுதியை இன்னமும் அடர்த்தி கூட்டியிருக்கிறது. உறிதியாகச் சொல்வேன்... `தமிழின் மிகமுக்கியமான பல கவிதைகளை இந்தத் தொகுப்பில் கதிர்பாரதி எழுதியிருக்கிறான். ஆம் நண்பர்களே அதற்கு நானே சாட்சி.
- பாக்கியம் சங்கர்
No comments:
Post a Comment