ஒரு மேசையில் குறுக்கே அமர்ந்துகொண்டு ஒரு மனிதன் உங்களுடன் தீவிரமாகப் பேசுவதைப் போல கவிதை தோற்றமளிப்பது மிகவும் கடினம். ஆனால் அதை செய்கிறது தோழர் கதிர்பாரதியின் “உயர்திணைப் பறவை“ கவிதைத் தொகுப்பு.
றியாஸ் குராணா |
நாம் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் இருவர் போல தோற்றமளிக்கும் வாய்ப்பை இந்தக் கவிதைகள் உருவாக்குகின்றன. ஒருவருடன் ஒருவர் முரண்படவும், இணங்கிச் செல்லவும் சொற்களின் வழியே பாதைகள் திடீர் திடீரென்று கிளைத்துச் செல்கின்றன. எதிர்பாராத கணங்களில் நாம் தனித்துவிடப்பட்டதைப்போல் உணர்கிறோம். சொற்களினுள்ளே இருந்து பாய்ந்து செல்லும் நதியைப்போல, வரிகளையும், அர்த்தங்களையும் இயல்பாக கவிதையின் எல்லை வரை இழுத்துச் செல்கிறது.
சொல்ல நிறைய இருக்கின்றன, ஆனால் பேச்சு ஒரு சுமை என்று அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன கதிர்பாரதியின் கவிதைகள். தமிழில் பயிலும் நவீன கவிதைகளின் எல்லைகளை தாண்டி மீறிச்செல்லும் பல கவிதைகள் இன்று பலராலும் எழுதப்படுகிறது. அந்த வகையின் முக்கியமான ஒரு கவிதைசொல்லியாக கதிர்பாரதி வெளித்தெரிகிறார். அவருக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்.
No comments:
Post a Comment