26 July, 2012

அரசல்புரசலின் நிறம்


கி.மு.இரண்டாயிரத்தில் கேரட்கள்
ஊதா நிறத்தில்தான் இருந்தனவாம்.
பிறகேன் இளஞ்சிவப்பு நிறம்கொண்டது
என்கிறீர்களா?
ஆண் பிள்ளையாகிய என்னால்
காரணத்தைச் சுவாரஸ்யமாகச்
சொல்லிவிட முடியும்.
எனில்,
நான் சொல்லப் போவது
நீங்கள் அரசல்புரசலாக அறிந்ததுதான்.
அப்படியென்றால்
நாங்களே சொல்லிக்கொள்கிறோம்
என்கிறீர்களா?
சொல்லுங்கள்.
ஆனால், உங்களுக்குத்தான்
சுவாரஸ்யமாகச் சொல்ல வராதே.
நீயே சொல்லிவிடு என்கிறீர்களா?
உங்களுக்கு அரசல்புரசலாகத் தெரிந்ததை
சொல்வதற்கு நானெதற்கு.
தவிர,
கேரட்கள் இளஞ்சிவப்பு நிறம் கொண்டதும்
இப்படி அரசல்புரசலாகத்தான் என்றால்
நீங்கள் நம்பவா போகிறீர்கள்.


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தலை சுத்துது சாமீ !
ஹா..ஹா...

நன்றி...

நிலாமகள் said...

உண்மைதான்... எங்க‌ளால் சுவார‌ஸ்ய‌மாக‌ சொல்ல‌ முடியாதுதான்... அத‌ற்கெல்லாம் தான் நீங்க‌ இருக்கீங்க‌ளே!

thamilarasi said...

அரசல் புரசலா தெரிந்ததை வச்சி எங்க தலையில் அரைச்சாச்சா?

கதிர்பாரதி said...

ஹாஹாஹாஹ்

அப்பாதுரை said...

சென்னை கிறுஸ்தவக் கல்லூரியில் நிறையக் காய்கறிக்கதைகள் இப்படி அரசல்புரசலாகச் சொல்லப்படுவதுண்டு. சென்ற நூற்றாண்டுச் செய்தி :)

கதிர்பாரதி said...

நன்றி அப்பாஜி :)

vasan said...

"அர‌ச‌ல் புர‌ச‌ல்" தொட‌ரும் வ‌ரைதான் அது சுவார‌ஸ்ய‌ம்.