வணக்கம் நண்பர்களே...
புன்னகை இதழ் ( ஜூலை ஆகஸ்ட் - 2012) எனது பதிமூன்று கவிதைகளோடு கதிர்பாரதி சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. மிகவும் நேர்த்தியாக இதழைக் கொண்டு வந்திருக்கும் புன்னகை இதழின் ஆசிரியர் குழுவுக்கு என் நன்றிகள். குறிப்பாக கவிஞர் க.அம்சப்ரியாவுக்கு எனது ப்ரியங்கள். அவர்தான் என்னை இதற்கு தயார்ப்படுத்தினார். நான் கவிதைகளை அனுப்புவதற்கு தாமதப்படுத்தியபோதும் அவரது பொறுமையால் என்னை நெருக்குதலுக்கு உள்ளாக்கிய அன்பு, அம்சப்ரியாவுடையது. இந்த இதழின் அட்டைப்படத்துக்கு என்னைக் கோட்டோவியமாகத் தீட்டித்தந்த நண்பன் ஓவியர் ஞானப்பிரகாசஸ்தபதியின் தூரிகையால் நான் கௌரவமடைகிறேன். என் கவிதைகள் குறித்து பேசிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....
வாசித்துவிட்டுச் சொல்லுங்கள் நண்பர்களே.
இது விருந்துக்கு முன்பு வைக்கிற இனிப்பு.
என் முதல் கவிதைத் தொகுப்பு என்கிற விருந்தோடு உங்களை விரைவில் சந்திக்கிறேன்.
புன்னகை தொடர்புக்கு:
அம்சப்ரியா - 9942240547
புன்னகை கவிதை இதழ்
68 ஆனை மலை
பொள்ளாச்சி0624104
04253 - 283017
5 comments:
எதிர்ப் பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
சமீபத்தில் நீங்கள் எழுதிய எல்லாக் கவிதைகளுமே மொழியின் கூரில் பளபளக்கின்றன கதிர்.
புன்னகைக்க வைக்கும் அற்புதமான கோட்டோவியமாக உங்களைத் தீட்டிய ஞானப்ரகாசஸ்தபதியின் விரல்களுக்குத் தனிப் பாராட்டுக்கள்.
தொகுப்பு விரைவில் வரட்டும்.
வாழ்த்துகள் ‘புன்னகை’ சிறப்பிதழுக்கும், வரவிருக்கும் முதல் தொகுப்புக்கும்!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கவிஞரே
இன்று தான் பார்த்தேன். இன்றே அம்சப்ரியாவைத் தொடர்பு கொண்டு இதழைப் பெற முயல்வேன். உங்கள் சிறப்பிதழ் சிறப்பாய் தான் வந்திருக்கும்... விருந்துக்கு முந்தின இனிப்பே ஜம்மென்றிருக்கிறது கதிர்...வாழ்த்துக்கள்.....
Post a Comment