எப்போதும்
சலியாத விளையாட்டுத்தான்
என்னிரு
மகன்களுக்கும்.
சென்னை மாநகர
ரயில் பயணம் ஒன்றில்
ஆள்காட்டி
விரலை ஆட்டி
இது எக்மோர்
என்கிறான் கபிலன்.
ஆள்காட்டி
விரல் சேத்துப்பட்டு
என்கிறான்
திலீபன்.
நடுவிரல்
நுங்கம்பாக்கம்.
மோதிர விரல்
கோடம்பாக்கம்.
சுண்டுவிரல்
மேற்கு மாம்பலம்.
அப்போது
பார்க்கிறேன்
கட்டைவிரலுக்கும்
சுண்டு விரலுக்கும்
இடையில்
ஒரு அதிவேக
ரயில்கள் போய்க்கொண்டும்
இரு மிதவேக
ரயில் வந்துகொண்டும்
இருக்கின்றன.
3 comments:
அருமை.
ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்குமிடையே போகும் அதிவேக ரயிலில் பயணிக்கிறோம் அவர்களின் உற்சாகம் நம்மையும் தொற்ற... திலீபனும் கபிலனும் உலவும் கவிதைகள் எல்லாம் வெகு ரம்யம் சார்.
beautiful.
Post a Comment