லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்க்கையிலே... பாடலில்
எம்.ஜி.ராமச்சந்திரன் மஞ்சுளாவின் உதடுகளைச் சுண்டிவிட்டு
இப்பிரபஞ்சத்தைத் தேன்துளியாக்கி புரட்சி செய்துகொண்டிருக்கையில்
அப்படித்தான் லயித்துப் போனார் மிஸ்டர் மாரியப்பன்.
அதே எம்.ஜி.ராமச்சந்திரன்
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்... என்று
சாட்டையைச் சுழற்றியடிக்கையில்
தனக்குள் ஏதோவொன்று அடிப்பட்டு உடைந்துகொண்டிருப்பதாகத்
துணுக்குற்றுப் போனார் மிஸ்டர் மாரியப்பன்.
அதே எம்.ஜி.ராமச்சந்திரன்,
நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பாப்பேன்
என்று தத்துவத்துக்குள் தாவிக்குதிக்கையில்
உண்மையிலேயே மிஸ்டர் மாரியப்பனின் இதயக்கனியில்
கசப்பின் சுவைத்தான் பரவத் தொடங்கியது.

1 comment:
கசப்பின் சுவைதான். அபாரம்.
Post a Comment