23 July, 2012

அப்படித்தான் விழுகிறது

கண் அவிந்த 
ரயில் பிச்சைக்காரன் பாடலில்
வேர்க்கடலை உமிகளை 
ஊதிவிடுகிறான்
கூடப் பயணிக்கும் பிரயாணி ஒருவன்.
அவை
அந்தப் பாடலுக்கு ஏற்ப
அசைந்து
சுழன்று
ஆடி
ஏந்தியிருக்கும் பிச்சைப்பாத்திரத்தில்
விழுகிறது.
அவனது பாடல்கூட
பிரயாணியின் காதில்
அப்படித்தான் விழுகிறது.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய காலத்தில் மனிதநேயம் அவ்வாறு தான் உள்ளது...
பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

மிக நன்று.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பாடலில் மிதந்த உமி பாத்திரத்தை நிரப்ப, இசை ஏற்காத செவிகளைத் தட்டித் தோற்ற பாடல் துணைக்கு உங்கள் கவிதையைக் கூட்டிக்கொண்டு என் மனதில் நிரம்பியது.

கிரீடத்தில் மேலும் ஒரு மென்சிறகு இந்தக் கவிதை.