ஊட்டிவிடுங்க என்பதை
”சாப்பிட்டு விடுங்க” என்கிற திலீபன்
வயிறு நிறைந்ததும்
போதும்பா நாளைக்குச் சாப்பிடறேன் என்பதற்குப் பதில்
”நேத்துக்குச் சாப்பிடறேன்” என்று
நேற்றின் தலை மேல் ஒரு காலை வைக்கிறான்.
நம்மை எதுவும் செய்யாதிருக்க வேண்டுமே என்று
நடுநடுங்குகிறது இன்று.
”நாளைக்குச் சோறு சாப்பிடறப்போ
எனக்கு வயித்தை வலிச்சுதுல்ல
அதான் சொல்றேன்” என்றபோது
நாளையின் தலைமீதும் நங்கென்று ஒரு கால்.
எவை பற்றியும் கிஞ்சித்தும் கவலையில்லை.
காலங்களை மயக்கி
அவன் படைக்கும் அகாலம்
விஸ்வரூபம் எடுக்கிறது.
அதன்
அடி - முடியைக் கண்டடைபவர்களுக்கு
திலீபனின் ஆசீர்வாதங்கள்.
”சாப்பிட்டு விடுங்க” என்கிற திலீபன்
வயிறு நிறைந்ததும்
போதும்பா நாளைக்குச் சாப்பிடறேன் என்பதற்குப் பதில்
”நேத்துக்குச் சாப்பிடறேன்” என்று
நேற்றின் தலை மேல் ஒரு காலை வைக்கிறான்.
நம்மை எதுவும் செய்யாதிருக்க வேண்டுமே என்று
நடுநடுங்குகிறது இன்று.
”நாளைக்குச் சோறு சாப்பிடறப்போ
எனக்கு வயித்தை வலிச்சுதுல்ல
அதான் சொல்றேன்” என்றபோது
நாளையின் தலைமீதும் நங்கென்று ஒரு கால்.
எவை பற்றியும் கிஞ்சித்தும் கவலையில்லை.
காலங்களை மயக்கி
அவன் படைக்கும் அகாலம்
விஸ்வரூபம் எடுக்கிறது.
அதன்
அடி - முடியைக் கண்டடைபவர்களுக்கு
திலீபனின் ஆசீர்வாதங்கள்.
2 comments:
திலீபன் காலங்களைக் கடந்தவன். மயக்கும் கால அகாலங்களில் எக்காலங்களிலும் வாழ்வான்.
திலீபன் படைக்கும் அ'கால'த்தின் விஸ்வரூபம் தருவது குதூகலம்.
Post a Comment