மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்கிற என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை, புது எழுத்து பதிப்பகம் வெளியிட்டு 13_வது வருடம் ஆகிறது. அதன் பிறகு மூன்றாம் பதிப்பை சால்ட் பதிப்பகமும் நான்காவது மற்றும் ஐந்தாவது பதிப்பை இன்சொல் பதிப்பகம் வெளியிட்டது.
முதல் பதிப்பு 2013_ம் ஆண்டு வெளியாகிய இத்தனை வருடங்களில் இந்தத் தொகுப்பு எனக்கொரு முக்கிய அடையாளமாகவும் நித்தம் புதுப்புது வாசகரை எனக்குத் தருவதுமாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்துக்குப் பிறகு மூன்று தொகுப்புகள் வந்துவிட்டன. எனினும் தாய் முதல் பேற்றையும் குழந்தையும் சற்றுக் கூடுதலாகவே நேசிப்பாள். அப்படி என் நேசத்தைப் புதிப்பிக்கத் தூண்டியிருக்கிறது எழுத்தாளர் சுபஸ்ரீ முரளிதரன் வாசகசாலை இணையத்தில் வழங்கியிருக்கும் குறிப்பு. அவருக்கு நன்றி.
அவரது உரை கீழே உண்டு.
..
No comments:
Post a Comment