29 May, 2025

ஆனந்தியின் பொருட்டுத் தாழப் பறக்கும் தட்டான்கள் - விமர்சனம் - எழுத்தாளர் கரிகாலன்.

 கவிஞன்

#
எனது நிலம் தழைக்க அதில் ஆறுகள் ஓடின.
குளங்களில் தாமரைகள் மலர்ந்தன. அழகிய மங்கைகளதில் நீராடினர்.குளத்தின் கரையில் தெய்வங்கள் ஆளும் ஆலயங்கள் இருந்தன.
அதன் மாடங்களில் மணிப்புறாக்கள் காதல் செய்தன.
வெய்யிலை அருந்தி தன் சிறிய ரெக்கைகளை படபடவென அடித்தபடி தட்டான்கள் எங்கள் கனவுக்கு குறுக்காகப் பறந்து சென்றன.செம்மை படர்ந்த தொடுவானத்தினூடாக கொக்குகளும் நாரைகளும் தம் இருப்பிடம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தன.
மந்தை கிளப்பிய மஞ்சளந்திப் புழுதியின் பின்னணியில் சித்திரம்போல எங்கள்
அஞ்சலைகள் மறியோட்டி வீடேகினர்.
எல்லாம் ஞாபங்களாக இன்றோ எங்கள் மருதத்தின் திணைகளை தார்ச்சாலைகளும் கேபிள்களும் சுரங்கங்களும் அழித்து விட்டன.
எழுத்தாளர் கரிகாலன்
எம் மூதாதைகள் பிள்ளைகளைப் போல் வளர்த்த மரங்களில் எம் உழுகுடிச்
சொந்தங்களின் உடல்கள் கனிந்து தொங்கின. எங்கள் வாழ்வில் கண்ணீர்த் துளி சொட்டி சொட்டி உப்பு கறிக்கத் தொடங்கின.
காதலும் வீரமும் ஈரமும் இரக்கமும்
நிறைந்த நிலம் இன்று ஒரு வணிக வளாகம்
போலாகி விட்டது.
தெய்வம் கைவிட்ட நிலத்திலிருந்து கவிஞனொருவன் நாடோடியைப் போல தன் புல்லாங்குழலை இசைத்தபடி சென்று கொண்டிருக்கிறான். அவனை உற்று கவனிக்கிறேன்.
என் தம்பி Kathir Bharathiயேதான் அது.
அவன் பாடல் பெண்களை.. நிலத்தை.. விடுதலையைப் போற்றி காற்றில் பரவிக்கொண்டிருக்கிறது!
#ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்

No comments: