27 December, 2012

கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் வெளியீடு....

22.12.2012 அன்று எனது முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள், நண்பர் நிலாரசிகனின் மீன்கள் துள்ளும் நிசி நண்பர் இயற்கை சிவம் ஆசிரியராக இருந்து, கொண்டு வரும் வெயில் நதி சிற்றிதழ் அறிமுகங்கள் நிகழ்ந்தன. நிறைவான விழாவாக இருந்தது. முகப்பு புத்தகம் செல்போன் வழியாக பார்த்துக்கொண்ட நிறைய நண்பர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. விழாவில் கவிதைப் புத்தகங்கள் பேசிய அத்துனை பேரும் தயாரிப்போடு வந்திருந்திருந்தது ரசிக்க தக்கவையாக இருந்தன. விழாவை ஒருங்கிணைத்து நடத்திய யாவரும் டாட் காம் குழுவுக்கும் விழாவில் கலந்துகொண்ட அத்துனை தோழமைகளுக்கும்இடம் தந்து உதவிய டிஸ்கவரி புக் நிலையத்தாருக்கும் எனது நன்றி. விழாகுறித்த புகைப்படத்துளிகளை நான் பதிகிறேன். விழாகுறித்து நண்பர்கள் எழுதுங்கள்... அறியத் தாருங்கள். படிக்க ஆவல்... என் புத்தகம் குறுத்தும் உங்கள் கருத்துகளைத் தாருங்கள்

3 comments:

Unknown said...

ஆளுமைகள் பேசியவைகளையும் பகிர்ந்தால் நலம்.

ச.முத்துவேல் said...

வாழ்த்துகள் கதிர்

Anonymous said...

அன்பின் கதிர்,

முதலில் என் வாழ்த்துகள். திரு.மனோன்மணி சொன்னார் உங்களின் தொகுப்பு குறித்து. எனக்கு மிகுந்த சந்தோஷமே யூமா.வாசுகி அதை வெளியிட்டது தான். என் பெரும் ஆதர்சம் அவர். அவரிடமிருந்து தான் நான் கவிதைகளையும் அது சார்ந்த உரையாடலையும் துவங்கினேன். என் முதல் தொகுப்புக்கு அவர்தான் பின்னட்டைக் குறிப்பு எழுதிக்கொடுத்தார். உங்களுக்கும் அவர் வந்து வாழ்த்தியது உங்கள் தொகுப்புக்கு பெருவெற்றியடையும் எனக் காட்டுகிறது.மேலும் “மெசியா” என்ற பெயரை கேட்டாலே எனக்கு “கிருபா”வின் நினைவு வருகிறது. அற்புதமான கவிஞன், அதுவும் அருமையான தொகுப்பு(மெசியாவின் காயங்கள்).
அதையும் மீறி நீங்கள் இத்தொகுப்பிற்கு ”மெசியாவின்” பெயரில் தொடங்கி பெயரிட்டுள்ளது உங்களின் அசாத்தியமான தைரியத்தை காட்டுகிறது. அந்த தொகுப்பின் வீச்சை தாண்ட யத்தனிக்கும் உங்கள் முயற்சி பலிக்கட்டும்,நன்றி.பாம்பாட்டிச்சித்தன்