கதிர்பாரதியின்
கவிதைகளை நான் தொடர்ந்து
கவனித்து வருகிறேன்.
அவர்
தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன்
கவிதைகளில் இயங்கி வருவது
குறித்து மிகுந்த மகிழ்ச்சியாக
இருக்கிறது.
அதுமட்டும்
இன்றி அவ்வப்போது அவரது
கவிதைகளைக் குறித்தும் நான்
அவரிடம் உரையாடியிருக்கிறேன்.
மிகுந்த
உற்சாகத்துடன் என்னோடு
உரையாடுவார்.
மிகுந்த
எதார்த்தத்துடன்,
பகட்டுகள்
ஏதும் இல்லாமல்,
இயல்பாக
எளிமையாக மரபின் சாயலுடன்
எழுதி வரும் கதிர்பாரதியின்
கவிதைகள் மனதுக்கு இதம்
தருபவை.
நம்
சமகாலத்திய கவிஞனும்,
விமர்சகரும்
மொழி பெயர்ப்பாளருமான Robert
Fitzerald ராபர்ட்
ப்ட்ஜெராட் கவிதையென்பது
குறைந்த பட்சமாக வசீகர
தேர்த்தியென்றும் அதிகபட்சமாக
தேவவெளிப்பாடு அல்லது
தேவோக்த்தம் என்றும் மிக
அழகாக குறிப்பிடுகிறார்.
கவிதையென்பது
ஒரு தொழில் அல்ல,
அது
வாழ்வின் முறை என்றும்,
அது
ஒரு காலிக் கூடை,
அதில்
வாழ்வினை இட்டு அதனை எதாவது
செய்து பார் என்றும் சற்று
நகைச்சுவையாகச் சொல்கிறார்
அமெரிக்கச் சமகாலக் கவிஞரும்
புலிட்சர் பரிசுக்குரியவருமான
மேரி ஆலிவர்.
கவிதைகள்
குறித்து எத்தனையோ சொல்லப்
பட்டிருக்கின்றன.
கவிஞனின்
நோக்கில் ஒரு விதமாகவும்,
விமர்சக
நோக்கில் ஒரு விதமாகவும்,
சாதாரண
மனிதனின் நோக்கில் ஒருவிதமாகவும்,
கலைஞனின்
நோக்கில் ஒருவிதமாகவும்
வடிவம் கொள்ளும் கவிதை எப்போதும்
ஒரே வடிவத்தில் இருப்பதே
இல்லை.
வடிவங்களற்றும்
வேறு வேறு வடிவமாகவும் தெரியும்
கவிதைகள் ஒரு அப்ஸ்ட்ரக்ட்
ஓவியத்தைப் போலவே எனக்குள்
எப்போதும் தோற்றங்கொள்கின்றன.
தற்போதைய
சூழலில் நரன் தனது சிறுகுறிப்பில்
சொல்லியிருப்பது போல மொழியின்
இறுக்கத்தைத் தளர்த்திய
கவிதைகள் கதிர் பாரதியினுடையவை.
இவரது
தொகுப்பு கையில் கிடைத்ததும்
உறையைப் பிரித்த போது புத்தகத்தின்
முகப்பிற்கு பதிலாய் கண்ணில்
பட்டது பின்புற அட்டையும்,
நரனின்
குறிப்பும் தனது கவிதைகளைப்
போலவே எளிமையாய்ச் சிரித்துக்
கொண்டிருந்த கதிரின்
புகைப்படமும்தான்.
அப்படியே
புத்தகத்தைப் பின்புறமிருந்து
புரட்டி நான் வாசித்த முதல்
கடைசிக்கவிதை இன்னும் மனதில்
நிற்கிறது.
அன்றாட
நிகழ்வுகள்,
the everydayness கதிரை
எப்படி ஆழமாக பாதிக்கின்றன
என்பதை பதிவு செய்கின்றன
அவரது கவிதைகள்.
தனிமனித
வாழ்வு குறித்து மட்டுமின்றி,
நிலமும்,
நிலம்
மீதான பயிர்களும்,
உடனுரை
உயிர்களும் அவற்றின் அழகும்
வலியும் அவரால் எப்படி
தொட்டுணரப் பட்டன என்பதற்கு
நான் வாசித்த அவரின் கடைசிக்
கவிதையே கட்டியம் கூறுகிறது.
பக்கம்
68...
(கவிதை
வாசிக்க..)
இந்தக்
கவிதையை வாசித்ததும்...
முதலில்
நினைவுக்கு வந்தது புலான்
உண்ணாமை அதிகாரத்தின் இரண்டு
குறள்கள்..
கொல்லாள்
புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா
உயிரும் தொழும்
தன்ஊன்
பெருக்கற்க்குக் தான் பிரிது
ஊனுன்பான்
எங்கனம்
ஆளும் அருள்.
கைகூப்பித்
தொழக்கூடிய கவிதையாகவே எனக்கு
அது படுகிறது.
மறியின்
கதறலை தேவமைந்தனின் கையறு
நிலைக்கு ஒப்பிட்ட மஹிமை மிக
உன்னதம்.
கூடவே
ருதுவனத்தின் எனது ஒரு கவிதை
நினைவுக்கு வந்தது.
”இருள்
புரளும் தார்ச்சாலைகளின்
வலியுணராது
அக்கரையின்றி
விரையும்
குளுரூட்டப்பட்ட
வாகனம்”
ஒற்றை
மலரின் தொடலில் உருவாகிவிடுக்கின்றன
கதிருக்குள் கவிதைகளாக.
இந்தத்
தொகுப்பின் நான் மிகவும்
ரசித்த கவிதை என்று சொன்னால்
ஆனந்தியின் பொருட்டு தாழப்
பறக்கும் தட்டான்கள்.
(பக்கம்
9...
வாசிக்க) அதுமட்டுமல்ல,
யானையோடு
நேசம் கொள்ளும் முறையை
நமக்கெல்லாம் போதிக்கிறார்
கதிர்பாரதி.
யானையின்
துதிக்கைக்கு முத்தம் தந்தால்
அது நேசத்தின் கணக்கில் வரவு
வைக்கப்படும் என்று ஒரு புதிய
விதிமுறைகயைக் கூட
உருவாக்கியிருக்கிறார்.
இனி
எல்லோரும் யானைகளை முத்தமிடுவோம்.
அவற்றின்
வாலுக்குப் பூச்சூட்டுவோம்.
கால்களில்
சங்கிலிகளுக்குப் பதிலாகச்
சலங்கைகளைப் பூட்டுவோம்.
தந்தங்களில்
மணி கட்டுவோம்.
எல்லாவற்றுக்கும்
மேலாக,
காணிநிலம்
வேண்டுமென்று சக்தியிடம்
வரங்கேட்டான் பாரதி.
ஆனால்
இருக்கும் நிலத்தை மீட்க
ஏங்கும் கதிரின் கவிதை என்னைத்
தொட்டது.
எனக்கு
வாய்த்தது நன்நிலம் தான்
என்று ஆரம்பிக்கிறது அந்தக்
கவிதை.
தனது
நிலத்தின் மீதான ஆத்மார்த்தமான
காதல்,
தளர்ந்து
போய்விடாத நம்பிக்கை கசாப்புக்
கடைக்காரனின் கதறும் மறி,
காந்திஜியின்
வயிற்றுக்குள் கதறிய மறி,
தேவகுமாரன்
கண்டெடுத்த மந்தை பிரித்த
மறி,
கல்வாரியில்
அரற்றிய தேவனின் ஒலி,
உண்ணாதே
புலால் எனச்சொன்ன வள்ளுவனின்
மதி அத்தனையும் கேட்டது அந்த
ஒற்றைக் கவிதைக்குள்.
இயற்கை
மற்றும் உயிர்களின் மீதான
கதிர் பாரதியின் இளக்கமுற்ற
மனப்பாங்கு அவரது கவிதைகள்
நெடுகிலும் ஒரு சன்னமான நதி
போல ஓடத் தொடங்கிய பின்
வாசிப்பவரின் நெஞ்சில்
அருவியெனப் பெருக்கம் கொண்டு
விழுகின்றன.
பறவையின்
கூடுகளில் ஊடுருவித் துளைத்த
சாரை,
எப்போதேனும்
ஒன்றிரண்டு அரும்புகளைத்
தருகின்ற தோட்டத்துச்
சப்பாத்திக்கள்ளி,
கூட்டில்
அடைக்கப்பட்ட புறா,
எலிகளின்
தானியச் சபலம்...
என்று
விரிகிறது அவரது கவிதைகளின்
வெளி.
அவரது
வனத்தின் சல்லிவேர்களோடு
சில விதைகளையும் கவ்வி வருகின்ற
பறவையின் பாடல்கள் இவரது
கவிதைகளுக்கான சிம்பொனியை
எனது வாசிப்பு நெடுகிலும்
பின்னணி இசைத்துக் கொண்டிருந்தன.
நேற்றைக்கும்
இன்றைக்குமாக காற்றில்
அலைந்தபடி இருக்கின்றன அவரது
கனவுத் தோட்டத்தில் முளைவிட்ட
பிஞ்சுக் கிளைகள்.
வேம்பின்
கருணையில் இவரது கோடைகள்
எல்லாம் தித்திப்பாகித்
திகட்டுகின்றன.
கதிரின்
ஆன்மவேட்கை கார்காலத்தை
அடைகாக்கும் குஞ்சாகவும்,
கொடுங்கோடையில்
மரக்கிளையில் கூடுகட்டும்
ஒரு இருளின் நிறமொத்த பறவையாகவும்,
துண்டுதுண்டு
கனவுகளை இழையாக்கி நெய்கின்ற
தேவதறியாகவும்,
அபிலாஷையின்
தளிர்களிலிருந்து சொட்டும்
துளிப்பனியாகவும்,
யாருக்கும்
தெரியாமல் மனதை நனைக்கும்
மழையாகவும்,
மழைத்துளி
அருந்தும் ஒரு சக்கரவாகப்
பறவையாகவும் என்னுள் தோற்றம்
கொண்டன.
கதிரின்
பார்வையில்...
ஒவ்வொரு
நாளும் விடியலில் ஒரு பூவைப்
பறித்துத் தனக்குத்தானே
சூட்டி அழகு பார்த்துக்
கொள்கின்றன.
எத்தனை
வியக்கத்தகு பார்வை இது.
இயற்கையும்,
வனப்பும்
இல்லாத சூழ்நிலையில்,
பதற்றமும்,
படபடப்புமான
அன்றாடங்களில்,
நெரிசலும்,
நெருக்கடியுமான
வாழ்வு முறையும்,
துரோகமும்
அதன் துக்கமும் தொண்டை அடைக்கும்
நாட்கடத்தலில்..
தனக்குள்ளே
ரகசியமாய் ஒரு மாபெரும் வனத்தை
உருவாக்கி,
கவிதைகளை
அவற்றின் கனியாக்கித் தருகிறது
கதிரின் மனது வாசகனுக்கு.
இரயிலைத்
துரத்திக்கொண்டே ஓடுவதைப்
போல தவறவிட்ட சந்தோஷங்களும்,
அடைய
முடியா எதிர்பார்ப்புகளின்
ஏமாற்ற தொனிகளும்,
உதிர்ந்து
விழுகின்ற இரண்டையும் இக்கவிதை
தன் கையளவு நிலத்தின் மீது
வைக்கிறது.
(பக்கம்
31...
வாசிக்க)
கனவுகளைப்
பதியமிட்டு வளர்க்கும் கதிர்பாரதியின் அகண்ட வனத்திற்குள்
காலத்தை அறுக்கும் ஆலகாலமும்
கலந்துதான் கிடக்கிறது.
பறவைகளும்,
யானைகளும்,
தேவகுமாரனும்,
ஆனந்தியும்,
திலீபனும்,
மெசியாவும்,
கலகலத்து
நகைத்தபடி ஓடியும் ஒளிந்தும்
விளையாட இயற்கை தளும்பிக்
கொண்டிருக்கிறது.
தொடர்ந்து
பல தொகுதிகளை கதிர்பாரதி
நமக்குத் தருவார் என்ற
நம்பிக்கையினையும் நம்முள்
விதைக்கிறது அவ்வனத்துப்
பறவை.
2 comments:
தொடர்ந்து பல தொகுதிகளை கதிர்பாரதி நமக்குத் தருவார் என்ற நம்பிக்கையினையும் நம்முள் விதைக்கிறது அவ்வனத்துப் பறவை.
----
சந்தோஷம்... தொடர்ந்து எழுதுங்கள்.
கவிகதிர்
கதிர்பாரதிக்கு வாழ்த்துக்கள்
Post a Comment