15 July, 2013

சிறையில் காதலைச் சொன்னாள்!

கொடுத்தலும் கொடுத்தலின் நிமித்தமும் 
தானே காதல். எதைக் கொடுத்தாலும் பெற்றுக் 
கொள்வதும் பெற்றுக்கொண்டதை இரட்டிப்பாகத் 
திருப்பித் தருவதும் காதல்தான். மணிமேகலையின் 
அட்சயப்பாத்திரத்தில் ஆதிரை இட்ட முதல் பிச்சை 
வளர்ந்துகொண்டே இருந்ததைப் போல, என் வாழ் 
வென்னும் பாத்திரத்தில் காதலை இட்டவள் என் 
மனைவி ஆதிரை என்னும் ஜெமிலா ஆலிஸ். 

கொலைக்குற்றத்தில் ஆயுள்தண்டனைக் கைதி 
யாக நான் மதுரைமத்தியச்சிறையில் இருந்தபோதுதான் 
ஆதிரை தன் காதலை என்னிடம் சொன்னாள். அது 
வும் அரைக்கால் டவுசர் வெள்ளைச்சட்டையென 
கைதியோடு கைதியாக நான் நிற்பதைப் பார்த்துவிட் 
டுப் போனபிறகு. 

1998 ஆம் ஆண்டில் நானும் என் தலைவர் தொல். 
திருமாவளவனும் அடிக்கடி ‘தலித்முரசு’ பத்திரிகை 
அலுவலகத்துக்குப் போவோம். நான், ‘தலித்முரசு’ 
இதழில் அரசியல் நகைச்சுவைக் கட்டுரைகளும் 
புத்தக விமர்சனங்களும் மண்ணாங்கட்டி என்கிற 
பெயரில் எழுதிக்கொண்டிருந்த சமயம் அது. அப் 
போது ஆதிரை அந்தப் பத்திரிகையின் லே-அவுட் 
ஆர்ட்டிஸ்ட். அ.மார்க்ஸ் எழுதிய ஒரு புத்தகத்துக்கு 
நானெழுதிய விமர்சனத்தைப் படித்துவிட்டுத்தான் 

முதன்முதலில் அவள் என்னோடு பேசினாள். 
அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் களப் 
பணியில் நான் தீவிரமாக இயங்கிய காலம். 
ஒருநாள் ‘தலித்முரசு’ அலுவலகத்துக்குப் போன 
போது ஆதிரை கேட்டாள், “நீங்க அடிக்கடி 
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டுக்கு வாய்தாவுக்குப் 
போறீங்களே ஏன்?” - நான் ஆதிரையை ஆழ்ந்து 
கவனித்தேன். 

“1997 ஆம் ஆண்டில் விடுதலைச் சிறுத்தைகள் 
நடத்திய மண்ணுரிமைப் போராட்டத்தை எங்கள் 
ஊர் விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டிப்பட்டியில் 
நடத்தியபோது கலவரம் மூண்டது. அதில் இரண்டு 
கொலைகள் விழுந்துவிட்டன. அந்த வழக்கில் என் 
குடும்பத்தில் நான், அப்பா, தம்பி... உள்பட 13 
பேர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து 
கொண்டிருக்கிறது. அதில் முதல் குற்றவாளியாகக் 
குற்றம் சுமத்தப்பட்டிருப்பது என் மீதுதான்” என்று 
சொன்னேன். பிறகு நான் அடிக்கடி ‘தலித் முரசு’ அலு 
வலகத்துக்குப் போகும்போதெல்லாம் நட்பாகப் 
பேசிக்கொள்வோம். சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிய 
வேண்டும். ஒடுக்கப்பட்டிருக்கும் சமுதாயம் உலக 
நீரோட்டத்@தாடு கலந்து முன்னேறவேண்டும் 
என்றெல்லாம் ஆதிரையிடம் பேசுவேன். 

இதற்கிடையில் நான் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை 
யில் உதவி ஆசிரியர், பிறகு ரபி பெர்னார்ட் ஆரம்பித்த 
‘நிலா’ டி.வி.யில் சப் எடிட்டர், எங்கள் தலைவர் 
இட்ட கட்சிப் பணிகளைச் செய்வது, ‘தலித் முரசு’ 
பத்திரிகையில் எழுதுவது, ஆதிரையைச் சந்தித்துப் 
பேசுவதென்று காலங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதி 
வாரத்தில் அயன்ரெட்டிப்பட்டி கொலைவழக்கில் 
தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டு, தீர்ப்பு ஒரு வாரம் 
தள்ளிப்போனது. அப்போது செல்போன் இல்லாத 
காலம். தாம்பரத்தில் இருக்கும் ஆதிரையின் வீட்டுக்கு 
போன் செய்து தீர்ப்பு தள்ளிப்போன விவரத்தைச் 
சொன்னேன். 

“இன்னும் ஒரு வாரம் ஆகுமா உங்களைப் 
பார்க்க” என்ற ஆதிரையின் குரலில் வருத்தம். 

“ஒரு வாரமும் ஆகலாம். இல்லை பார்க்க முடியா 
மலும் போகலாம். தீர்ப்பு சாதகமாக வருமென்று 
சொல்லமுடியாது. ஆனால் உயிருக்குப் பாதகம் 
இருக்காது” என்று சொல்லிச் சிரித்தேன். 

“உங்க@ளாட பேசணும். சென்னைக்கு நீங்க வர 


முடியுமா?” என்றாள். 
நான் சென்னை வந்தேன். ஆனால் ஆதிரையைப் 
பார்க்க முடியவில்லை. வழக்கறிஞர்களைச் சந்திக் 
கவே நேரம் சரியாக இருந்தது. 

நவம்பர் முதல் வாரத்தில், நான், அப்பா, தம்பி 
உள்ளிட்ட 13 பேருக்கும் ஆயுள்தண்டனை என்று 
தீர்ப்பானது. கட்சியைத் தவிர ஏறக்குறைய எல்லாரும் 
கைவிட்ட நிலை. மதுரை மத்தியச்சிறை செகண்ட் 
ப்ளாக்கில் ஆயுள்கைதியாக நான் வாட ஆரம்பித்திருந்த 
ஆறாவது மாதம் அது. ஆதிரையும் அவள் அம்மாவும் 
மனு போட்டு என்னைப் பார்க்க வந்தது அதிர்ச்சி 
கலந்த ஆறுதல் எனக்கு. அப்போதுதான் என்னை 
டவுசரோடும் வெள்ளைச்சட்டையோடும் பார்த்து 
ஆதிரை அதிர்ந்தாள். 

“எப்போ வெளி@ய வருவீங்க?” என்றாள். 

“தெரியலை. எதையும் உறுதியா சொல்ல முடி 
யாது. எப்படியும் மூணு வருஷத்துக்கு மேலாவது 
ஆகும்” என்றேன். கொஞ்சநேரம் பேசினோம். 

“சரி நாளைக்கு மறுபடியும் வந்து உங்களைப் 
பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட் 
டாள். மறுநாளும் இதே பேச்சுதான். 

“எப்போ வருவீங்க? உங்களுக்காகக் காத்திருக் 
கேன். எனக்கு நீங்க வாழ்க்கைத் துணையா வரணும்” 
என்று என்னைத் தைரியப்படுத்திவிட்டுப் போன 
ஆதிரையின் காதலை இப்போது நினைத்தாலும் 
உள்ளுக்குள் உடைந்துவிடுவேன். 

சிறைக்குள் வதங்கிக்கிடந்த எனக்கு வெளியே 
ஆதிரையோடு வாழ்க்கை இருக்கிறது என்ற 
நினைப்பே தெம்பாக இருந்தது. ஆதிரை எனக்கு-
எழுதும் கடிதங்கள் வரும்போதெல்லாம் சிறைக்குள் 
திருவிழாதான். கடிதத்தை ஒரு நாளுக்குள் எப்படியும் 
ஐம்பது தடவைக்குமேல் படித்துவிடுவேன். சாதாரண 
மாக வீட்டிலிருந்து கடிதம் வந்தாலே கைதிகள் கத்திக் 
கத்திப் படிப்பார்கள். எனக்கு வருவ@தா காதல் 
கடிதங்கள் என்பதால் சிறைக்குள் என் கொண்டாட்டத்துக்கு 
அளவில்லை.

 முதலில் பிரித்துப் படித்த சிறை அதிகாரி, 
காதலாக இருந்ததால் தணிக்கை சீல் மட்டும் வைத்து 
விட்டுப் படிக்காமலே கொடுக்க ஆரம்பித்தனர். 
இதனால் என் ஆதிரையின் பெயரிலேயே கட்சி நட 
வடிக்கைகள் எல்லாம் கடிதமாக வருவதும் அதைப் 
படிக்காமல் தணிக்கை சீலிட்டுத் தருவதும் எனக்கு 
வசதியாகப் போனது. 
இரண்டாண்டு காலம் தண்டனை முடிந்த 
நிலையில் ஜாமீனில் 2001 ஆம் ஆண்டு வெளியே 
வந்தேன். சிறையில் இருந்தவனுக்கு, இன்னும் சில 
வழக்குகளில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் ஒருவனுக்கு 
என் பெண்ணைத் தர முடியாது என்று ஆதிரையின் 
அப்பா எங்கள் காதலை ஒத்துக்கொள்ள மறுக்க, 
மீண்டும் மன உளைச்சல். ஆதிரை கொண்ட காதல் 
உறுதியும் அவள் அம்மாவின் ஆதரவும்தான் இன்று 
எங்களை கணவன் - மனைவியாக இணைத்திருக்கிறது. 

ஈழப் போராளிகளோடு இருந்த தொடர்பால் 2008 
ஆம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது 
என்னை அழைத்தார்கள். ராமேஸ்வரம் அக்களத் 
தீவிலிருந்து படகு வழியாகத்தான் போனேன். 
போராளிகளின் படகில் போவதற்குத் தனி திராணி 
வேண்டும். அந்தப் படகின் வேகத்தால் தண்ணீரில் 
தீப்பொறி பறப்பதை நேரில் கண்டவன் நான். அது 
போன்ற பல ஆபத்தான பயணங்களுக்கு என்னை 
அனுமதித்துவிட்டுக் குடும்பத்தைக் கவனித்தவள் 
ஆதிரை. ஈழத்தின் சமாதான காலகட்டத்தில் ஆரம்பிக் 
கப்பட்ட ஒரு தொலைக்காட்சியின் தொடக்கப்பணிக் 
காக என்னைப் போராளிகள் அழைத்திருந்தார்கள். 
அப்போது ஆதிரை இரண்டாவது மகனை வயிற்றில் 
சுமந்திருந்த நிறைமாதக் கர்ப்பிணி. ஆனாலும் 
அனுப்பி வைத்தாள். ஈழத்துக்குப் போனால் 
குடும்பத்தோடு எந்தத் தொடர்பும் இருக்காது. என் 
இரண்டாவது மகன் செந்தமிழ் திலீபன் பிறந்து 
இரண்டு மாதங்கள் கழித்துதான் எனக்கே தெரிய 
வந்தது. 

நான் வரித்துக்கொண்ட கொள்கைக்காக இது 
போன்ற இக்கட்டுகள், வழக்குகள் ஏராளம் சந்தித் 
தாயிற்று. “எல்லாத்தையும் எப்படிம்மா சகிச்சுக்கிற” 
என்று பலமுறை ஆதிரையிடம் கேட்டிருக்கிறேன். 
அப்போதெல்லாம் அவள் சொல்லும் ஒரே பதில், 
“என் மண்ணாங்கட்டி மீது எனக்கு அம்பூட்டுக் 
காதல்” என்று சொல்லிச் சிரிப்பாள். 

அவளின் சிரிப்பையும் என் லட்சியத்தையும் 
சுமந்துகொண்டு சிறுத்தைகளின் செய்தி தொடர் 
பாளனாகச் சுற்றுவது காதல் அல்லாமல் 
வேறென்ன? 




No comments: