14 September, 2012

தெய்வமாக உறங்குகிறாய்

உன்னை உறங்கச் சொல்லி
காலம் அருள்பாலித்திருக்கிறது.
ஒரு தெய்வமாக உறங்குகிறாய்.
உறக்கத்தின் பின்புறத்தில் சுழலும்
உலகத்துக்கு
நீதான் பட்டத்து ராணி
அதனால்
உன் குறும்புன்னகை வெளிச்சமாகிறது.
நீதான் காவல் தெய்வம்
அதனால்
உன் நீதிபரிபாலனம் கவசமாகிறது.
நீதான் மாநதி
அதனால்
உன் ஈரம் தாய்மையாகிறது.
நீ புரண்டுபடுக்கிறபோது
ஒருயுகம் முடிந்து
மறுயுகம் தொடங்குகிறது எனக்கு.
கண்கள் விழி
உன் உபாசகனின் திக்விஜயம்
முடிவுக்கு வந்துவிட்டது.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்து எழுதி உள்ளீர்கள்... அருமை...

Rasan said...

அருமை. தொடருங்கள்.

manichudar blogspot.com said...

உறக்கமே தெய்வ வரம் தான், தெய்வமாய் உறங்கும் உறக்கம்! பொறாமையாய் இருக்கிறது.