27 February, 2012

வேம்பு

இரு கார்காலத்துக்கு முன்பாக
தோட்டத்தில் ஊன்றிய வேம்பு
செழித்து வளரும் இந்தக் கோடையில்
நேற்றுக்கும் இன்றுக்குமாக
அலைந்துகொண்டிருக்கின்றன பிஞ்சுக்கிளைகள்
இன்றைத் துளைத்துக்கொண்டு
நாளைக்குள் ஊடுருவும் சல்லிவேரொன்றில்
அவள் பிரியத்தைச் சாய்க்கிறாள்.
ஏறுவெய்யில் நிலம் சலிக்கும் ஒரு முன்மாலையில்
பொன்மூக்குத்தி பூக்களால் சிரிக்கும்
வேம்பின் புண்ணியத்தில்
அத்தனை கசப்பாய் இல்லை
இந்தக் கோடை

6 comments:

கீதமஞ்சரி said...

அன்பால் இனிக்கிறது வாழ்க்கை. வேம்பால் இனிக்கிறது கோடை. வேம்பூவின் வாசம் மணக்கும் அழகிய கவிதை.

ராமலக்ஷ்மி said...

அருமை.

கே.வி.எஸ். said...

கவிதை நல்லா இருக்கு....

நிலாமகள் said...

பொன்மூக்குத்தி பூக்களால் //:-)

அத்த‌னை (க‌ச‌)க‌ச‌ப்பாயில்லை வேம்பும் வாழ்வும்! தென்ற‌லாய் க‌விதை.

Anonymous said...

// இன்றைத் துளைத்துக்கொண்டு
நாளைக்குள் ஊடுருவும் சல்லிவேரொன்றில்
அவள் பிரியத்தைச் சாய்க்கிறாள்.// அழகிய கற்பனை..சூப்பர்ர்ர்ர்ப்ப்ப்

// பொன்மூக்குத்தி பூக்களால் சிரிக்கும்
வேம்பின் // வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அழகிய சொல்லாடல் .. கோடை குளிர்ச்சியாய்!!!

உமா மோகன் said...

துணி விரித்து சேர்த்தெடுத்த பொன்மூக்குத்திப்பூக்கள்

நினைவில் மணக்கின்றன.