இரு கைவிரல்நுணிகளை
கோபுரமெனக் குவித்து
”வீடுன்னா இப்படித்தான் இருக்கும்”
என்று சிரிக்கிற திலீபன்
”மழை பெஞ்சா நனைஞ்சுடும்
அப்போ வீட்டை மூடிடணும்’’ என்று
இரு உள்ளங்கைகள் வரை
ஒட்டவைத்துக்கொள்கிறான்.
நனைந்தும்
நினைந்தும்
வாழ்வதற்கு
இந்த வீடு போதுமானதாக இருக்கிறது!
2 comments:
ரசனையான வரிகள்...
ரசனை மிகுந்த கவிதை....
Post a Comment