13 May, 2010

இழப்பு

கொஞ்ச காலமாய் கூடவே
வசித்துவருகிறது யாரும் கண்டறியாத மவ்னம்

மவ்னம்தானெனினும் அது சம்மதமில்லை
மரணம் விதைக்கும் மவ்னத்தைப் போன்று அது
துக்க நிறத்தைப் பூசிக்கொண்டதுமில்லை

மவ்னம் உடைபடும் பின்னொருசமயத்தில்
அதற்குள் கனலும் வெப்பத்தாலும்
வெடிக்கக் காத்திருக்கும் கேள்விகளாலும்
அதிரக்கூடும் காலத்தின் கள்ள மவ்னம்

போராளியின் கடைசிக்குண்டைப் போல
பிரயோகமாகப் போகும் அம்மவ்னம்
பருந்தை எதிர்த்தடிக்கும் தாய்க்கோழிஎன
தோற்றம்கொள்ள காத்திருக்கிறது

அப்போதெழும் பேரோலத்தில்
வார்த்தைகள் குரலிழந்து போகும்

நன்றி: கல்கி(04.07.2010)

3 comments:

உயிரோடை said...

//மவ்னம்//

மௌன‌ம் என்றே ப‌ழகிய‌ க‌ண்க‌ளுக்கு மவ்னம் வித்தியாச‌மாக‌ இருக்கின்ற‌து. ந‌ல்ல‌ க‌விதை வாழ்த்துக‌ள்

நேசமித்ரன் said...

//பிரயோகமாகப் போகும் அம்மவ்னம்
பருந்தை எதிர்த்தடிக்கும் தாய்கொழிஎன//

நல்லா இருக்கு சார்

தாய் கோழி ?

:)

பா.ராஜாராம் said...

சில கவிதைகள் வாசித்தேன் சார்.

நல்லாருக்கு.

திருப்பி திருப்பி வரும்படி இருக்கு.வருவேன்.அறிமுகத்திற்கு நன்றி!