மேலும் இக்கவிதைகளின் வாசிப்பில் நான் கண்டடைந்த தரிசனவெளி பூடகமானது. "அம்மா" என்கிற குறியீடாக மனதை நிரப்பிக் ஆழம் செல்லும் கவிதைகள் காலம் கடந்தும் உள்தங்கி தாயின் தனித்த முகமாக நினைவடுக்கில் முன்நிற்கும் சாத்தியம் கொண்டவை. கவிஞர் கதிர்பாரதியின் கவிப் படிமங்கள் மாறத் துவங்கிய பருவம் இது என்றே சொல்வேன் . கவிதைகளில் சொற்கள் சிக்கனமாயாயின. விஸ்தீரமான விவரிப்புகள் குறைந்து கவிதைகள் அடர்வாயின. ஒற்றை சொல்லே பிரத்யேகமாகிச் சொல்லும் விசயத்தை கூர்வலிமையுடன் நேராக உணர்தின. மொழியில் சுமையற்ற தன்மையுடன் மனஆழத்தை சென்றடையும் உணர்வுப் பிரவாகங்கள் கவிப்பாடு பொருள்களாயின.
என்னை வசீகரித்த கலாப்ரியா, கல்யாணிஜி, பிரமிள், பசுவையா, நகுலன், தேவதேவன், தேவதச்சன் போன்ற கவிமுன்னோடிகளும் யூமா வாசுகி , மனுஷபுத்திரன், போன்ற சமகாலத்திய கவிகள் கையாளும் கவிசெறிவின் நெகிழ்ச்சியின் இடத்திற்கு ** அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது ** கவிதை தொகுப்பில் கதிர்பாரதியும் நெருங்கி வர முயன்றிருப்பதாகத் தோன்றுகிறது.
இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நண்பர் அஜயன் பாலாவின்
நாதன் பதிப்பகம் அரங்கு எண் 664 -- ல்
கவிஞர் கதிர்பாரதியின் ** அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது கிடைக்கிறதுreactio
No comments:
Post a Comment