சென்னை புத்தகக் கண்காட்சியில் அம்மாவைப் பற்றி இரண்டு கவிதைத் தொகுப்புகள்.
இன்னொன்று சோ.விஜயகுமாரின் ' அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ'. வெய்யிலின் ',அக்காளின் எலும்புகள்' தொகுப்புப் போல, உக்கிரம் நிரம்பிய, ஆனால் உக்கிரமே தெரியாத வண்ணம் எழுதப்பட்ட கவிதைகள்.
இதை வாசிக்கிற யாரும், வேறு வேறு அன்னையரை, அல்லது அவரவர் அன்னையரைக் கண்டடைய முடியாது. நான் சோ.விஜயகுமாரின் அம்மாவையே கண்டேன். கண்டடைந்தேன் என்று சொல்வதை, அறிந்தே தவிர்த்திருக்கிறேன்.
சோ.விஜய குமாரின் அம்மாவை, கதிர்பாரதி அம்மாவை எல்லாம் நாம் அடையவே முடியாது
நாம் முயலவேண்டியது எல்லாம் அவர்களின் அம்மாக்களைப் பற்றிய கவிதைகளை அடைவதே.
No comments:
Post a Comment