தாய்ப்பாலிலும்கூட உப்புக்கரிக்கிறது.
துயரம் விஷம்போல பரவுகிறது.
துக்கத்தின் கர்ப்ப இருளில்
அவள் ஓர் அகல்விளக்காக எரிந்துகொண்டிருக்கிறாள்.
"அம்மா அமைதியாகிவிட்டால்
யார்தான் அமைதியாயிருக்க முடியும்"
38 ஆம் பக்கத்தைக் கடக்கமுடியாமல் கதிர்பாரதியோடு நின்றுகொண்டிருக்கிறேன்
நெடுநேரமாக.
பிடாரன் பசி பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று வண்ணநிலவனில் வாசித்த வரி எனக்குள் நுரைத்துத் ததும்புகிறது.
No comments:
Post a Comment