அம்மா எனும் சொல்லே கவிதை தான்.
கதிர்பாரதி அம்மாவின் வாழ்வையே கவிதையாக்கி அனைத்து அம்மாவிற்கும் படையலிட்டிருக்கிறார்.
ஒவ்வொரு கவிதையும் மகனாய்/மகளாய் பிறந்த ஒவ்வொரு மானுட இதயத்திற்குள்ளும் புதைந்து கிடக்கும் தாயின் நினைவுகளை மீளெழும்பச் செய்கிறது.கூடவே தந்தையும் உடன் வருகிறார்.
வாசிப்பவர் ஒவ்வொருவரும் நிச்சயம் கண்ணீரால் மனங்களை நனைத்துக்கொள்வது நிச்சயம்.
மகளுக்காகக் காத்திருக்கும் வேளை
பள்ளி மைதானத்தில்
ஊஞ்சலாடுகிறாள்
முன்னேறும் போது
சிறுமி
பின்னேறும் போது
அம்மா.
முன்னேறி ஒருமுறை
வானம் உதைத்தவள்
மகளைக் கண்டதும்
பின்னேறி வந்து
பூமியில் நின்று கொண்டாள்.
என அம்மாவையும் அம்மாவின் நினைவுகளையும் ஊஞ்சாலாடச் செய்கிறார்.
தீனியாகும் எதன் மீதும்
கறையான்கள்
வாய்வைக்கத் தயங்குவதில்லை.
நாளுக்குநாள்
உடல் நரங்கிய அம்மாவுக்குள்.
புற்றுவொன்று வளர்ந்த போதுதான்
அப்பாவின் சிரிப்பை
முதன் முதலில் கறையான்கள் அரித்தன.
அவரும் செதில்செதிலாக உதிர்ந்தார்.
செல்லடரித்த ஒரு வாழ்வை
புற்றுக்கறையான் வேட்டையாட
நாகம் ஒன்று
வேடிக்கை பார்த்த கதை இது.
என்று மனதை கலங்கடிக்கிறது கதிர்பாரதியின் கவிதை.
இப்படியாக கதிர்பாரதியின் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பார்த்துக் கொண்டிருக்கும் மனைப்பாம்பின் பார்வை நம்மையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
வாழ்த்துகள் கதிர்!
No comments:
Post a Comment