31 December, 2012

கவிஞர் நரன், ஆசிரியராக இருந்து கொண்டு வரும் இலக்கிய காலாண்டிதழ் இதழ் சால்ட்.., சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறது.




27 December, 2012

கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் வெளியீடு....

வணக்கம் நண்பர்களே...
22.12.2012 அன்று எனது முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள், நண்பர் நிலாரசிகனின் மீன்கள் துள்ளும் நிசி நண்பர் இயற்கை சிவம் ஆசிரியராக இருந்து, கொண்டு வரும் வெயில் நதி சிற்றிதழ் அறிமுகங்கள் நிகழ்ந்தன. நிறைவான விழாவாக இருந்தது. முகப்பு புத்தகம் செல்போன் வழியாக பார்த்துக்கொண்ட நிறைய நண்பர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. விழாவில் கவிதைப் புத்தகங்கள் பேசிய அத்துனை பேரும் தயாரிப்போடு வந்திருந்திருந்தது ரசிக்க தக்கவையாக இருந்தன. விழாவை ஒருங்கிணைத்து நடத்திய யாவரும் டாட் காம் குழுவுக்கும் விழாவில் கலந்துகொண்ட அத்துனை தோழமைகளுக்கும்இடம் தந்து உதவிய டிஸ்கவரி புக் நிலையத்தாருக்கும் எனது நன்றி. விழாகுறித்த புகைப்படத்துளிகளை நான் பதிகிறேன். விழாகுறித்து நண்பர்கள் எழுதுங்கள்... அறியத் தாருங்கள். படிக்க ஆவல்... என் புத்தகம் குறுத்தும் உங்கள் கருத்துகளைத் தாருங்கள்

அன்புடன்
கதிர்பாரதி
9841758984



அய்யப்பமாதவன், யூமா.வாசுகி, நான்



"மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" - யூமா.வாசுகி வெளியிட
வா. மணிகண்டன் பெற்றுக்கொள்கிறார்

நிலாரசிகனின் "மீன்கள் துள்ளும் நிசி" - அய்யப்பமாதவன் வெளியிட வெளியிட ஆத்மார்த்தி பெற்றுக்கொள்கிறார்.


வெயில்நதி சிற்றிதழ் அறிமுகம்... அய்யப்பன் அறிமுகப்படுத்த வசுமித்ர வழிமொழிகிறார்.


என் புத்தகத்தை வெளியிட்டு யூமா பேசுகிறார்.


யூமாவின் நெகிழவான பேச்சு


நிலாவின் தொகுப்புக்கு ஆத்மார்த்தி பேச்சு


யூமா வாசுகி, கதிர்பாரதி


வசுமித்ர, வேல்கண்ணன், இயற்கை சிவம், வா.மணிகண்டன்



விழாவுக்கு வந்த நண்பர்கள்



நிலாவின் தொகுப்புக்கு கவிஞர் வெயில் விமர்சனத்தை ஜீவகரிகாலன் வாசிக்கிறார்


தூரண் குணா, கணேசகுமாரன், வசுமித்ர, ஸ்ரீநிவாசராகவன்

என் கவிதை குறித்து வா.மணிகண்டன் பேசுகிறார்.


நிலா, சீனுராமசாமி



அய்யப்பமாதவன் என் கவிதைத் தொகுப்புக்கு  ஆற்றிய அன்புரை...


நெட்டையான நிகழ்ச்சி தொகுப்பாளர் வேல்கண்ணன்



என் கவிதைத் தொகுப்பு குறித்து சீனுராமசாமி பேசுகிறார் அல்லது நெகிழ்கிறார்.

தாராகணேசன், அய்யப்பமாதவன், சீனுராமசாமி


தாராகணேசன் என் கவிதைத் தொகுப்பு குறித்துப் பேசுகிறார்..


தாராகணேசன் என் கவிதைத் தொகுப்பு குறித்துப் பேசுகிறார்..




நண்பன் நரன்... என் கவிதைகள் நீளும் திசைகளில் இவனின் இருப்பு இருக்கும்


18 December, 2012

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் == கதிர்பாரதியின் கவிதை புத்தக வெளியீடு


வணக்கம் நண்பர்களே...


எனது முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்
புது எழுத்து பதிப்பக வெளியீடாக வந்துவிட்டது. புத்தகத்தினை மிகவும் நேர்த்தியாக
கொண்டு வந்திருக்கிறார் புது எழுத்து பதிப்பாளர் திரு. மனோன்மணி. அட்டைப்படத்தை
கவிதைத் தனத்தோடு வடிவமைத்துக் கொடுத்த ஓவியர் மணிவண்ணன் அவர்களுக்கு
என் அன்பும் நெகிழ்வும். பின்னட்டைக் குறிப்புகளை மிகவும் வாஞ்சையோடு எழுதித் தந்திருக்கும்
கவிஞர் நரன் என் கவிதைகள் நீளும் திசைகளில் எல்லாம் இருக்கிறார்.

எதிர்வரும் 22.12.2012 சனிக்கிழமை அன்று எனது புத்தகத்தை கவிஞர் யூமா வாசுகி அறிமுகப்படுத்துகிறார்.
என் நண்பர் கவிஞர் வா.மணிகண்டன் புத்தகத்தைப் பெற்றுகொண்டு அறிமுகத்தை வழிமொழிகிறார்.
விழாவினை யாவரும்.காம் (அய்யப்பமாதவன், வேல்கண்ணன், ஜீவகரிகாலன்.... ) & புது எழுத்து பதிப்பகம் இணைந்து நடத்துகிறது.
விழாவில் கவிஞர் நிலாரசிகனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு மீன்கள் துள்ளும் நிசி வெளியீடும்
வெயில் நதி சிற்றிதழ் அறிமுகமும் நடக்கிறது

எனக்கு முக்கியமான இந்நிகழ்வில் உங்களின் வருகையையும் எதிர்பார்க்கிறேன். வாருங்கள் நண்பர்களே....


விழா குறித்த விவரங்களுக்கு....
http://www.yaavarum.com/archives/660


அன்புடன்
கதிர்பாரதி9841758984
 

06 December, 2012

தேவை: ஓர் அழுகையும் சில விசும்பல்களும்


உங்களுக்கு எப்படி ஆறுதல் தருவதென்று தெரிந்தேனில்லை.
உச்சந்தலை வருடி 
உள்ளம் தொட வேண்டும் போலிருக்கிறது.
கன்னத்தை இதமாகத் தாங்கலாம்தான்
அது இன்னும் உங்களை தளும்பச் செய்திடுமே.
உள்ளங்கையில் ஆதூரமாக ஓர் அழுத்தம் தந்து
என் ஆறுதலைக் கடத்திவிட முடியாதுதான்.
கண்களில் வழிகிற அந்தத் தவிப்பு
எனை வலிக்கச் செய்கிறதே
இறுக அணைத்து உங்கள் துக்கத்தைத்
தோள்மாற்றிக்கொள்ள முடியுமா என்றுகூட யோசிக்கிறேன்.
சலிப்பில் முளைத்த உங்கள் முன்நெற்றி சுருக்கத்தை நீவிவிடவும்
நடுங்கும் பெருமூச்சை ஆற்றுப்படுத்தவும்
என்னிடம் நிரம்ப உள்ளன சொற்கள்.
எனினும்
இப்போது உங்களுக்குத் தேவை.
கதறி
உடைந்து
நொறுங்கி
கரையும்
ஓர்
அழுகையும்
சில
விசும்பல்களும்.

புது எழுத்து வெளியீடாக வரவிருக்கும் என் கவிதைத் தொகுப்பு:


புது எழுத்து வெளியீடாக வரவிருக்கும் என் கவிதைத் தொகுப்பு :

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்-கதிர்பாரதி

எளிமையும் வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்பாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின், இந்நிலத்தின் மீது அன்றாடம் நிகழ்த்தப்படும் அற்புதங்களையும் விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர்கின்றன இவரது கவிதைகள். பெருங்காமப் பேராற்றுத் தீரத்தில் ஒரு கைநீரள்ளி கோபியர் மீது தெளித்து விளையாடும் கிருஷ்ணனின் கரங்கள் வாய்த்திருகின்றன இவரின் சில கவிதைகளுக்கு. சமகாலச் சூழலில் மொழியையும் அதன் இறுக்கத்தையும் தளர்த்திய கவிதைகள் இவை.
-நரன்