மறியின் பச்சைய கனவுகளை
முடித்துவைக்கும் மேய்ப்பனைப் போல
எலிகளின் தானிய சபலத்தை
நிவர்த்திக்கும் கழனிகளைப் போல
உன்னை மையமாக்கி
சுழல்கிறதென் உலகம்
உனது கோபுரங்களில் குடியிருக்கும்
ஆசையின் கனவுக் கண்களை
உனது சுனைகளில் நீராட்டிச் சிவக்கவிடுவாயா
காதுகளை உரசித் தொங்கும்
நேர்த்திக் கடனென
காமத்தின் பக்கவாட்டில் ஆடுகின்றன
கொங்கைகளின் மீதான வேட்கை
ஒரு வட்டக் கிணறு போல
குறு அலைபரப்பும் உன் பருவத்தை
நம்பியிருக்கிறது அதன் புன்செய்நிலம்
நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]
2 comments:
இதை காதல் என்பதா ?
இல்லை காமம் என்பதா ?
என்று கேக்கும் அளவிற்கு இரண்டும் கலந்து சிந்திய கவிதை .
அற்புதம் வாழ்த்துக்கள் !
thanx
Post a Comment