22 March, 2012

வருந்திச் சுமக்கிறவர்களின் ஹிட்லர்


ஆக...

ஹிட்லரின் அந்தபுரத்தை சமாதனத் தூதுவர் ஆக்கிரமித்துக்கொண்டார்.

அவனது காதலியையும் பணிப்பெண்களையும் எடுத்துக்கொண்டது

தூதுவரின் இச்சைக்காக என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும், ஹிட்லரின் சிம்மாசனத்தை உதாசீனப்படுத்தி விட்டு

அந்தபுரத்தை ஆக்கிரமித்ததொன்றும் தற்செயல் நிகழ்வல்ல.

ஹிடலருக்கு ஆதரவாக எழுந்த நாவுகளைக் கொய்ததும்

அவனாற்றிய நலத்திட்டங்களின் பலன்களை எரித்ததும்

திட்டவட்டமாகத் திட்டமிட்டதுதான்.

வீதிகள்தோறும் நிறுவியிருந்த ஹிட்லரின் சிலையிலிருந்து

மீசையை மட்டும் சிராய்த்ததில்

சிலைகள் தூதுவரின் சாயல்கொண்டதே ஆக்கிரமிப்பின் உச்சம்.

விடிகாலை வீதியில் குழப்பத்தில் தவித்த

ஹிட்லரின் மக்களை நோக்கி

சமாதனத்தின் தூதுவர் பேசிக்கொண்டிருக்கிறார்.

வருந்திச் சுமக்கிறவர்களே சத்தியமாய் நம்புங்கள்

நான் சமாதனத் தூதுவர் அல்ல

ஹிட்லர்

4 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமை...

manichudar blogspot.com said...

சத்தியமாய் நம்பித்தான் ஆகவேண்டும் தூதுவர் என்றாலும், ஹிட்லர் என்றாலும் ஏனெனில் வருந்தி பாரம் சுமப்பவர்கள் அல்லவா!

Unknown said...

வாழ்த்துக்கள் கதிர் பாரதி ஆக்கிரமிப்பின் உச்சம் மட்டுமல்ல , ஹிட்லரின் மீசையை சிரைத்தது உங்கள் படைப்பின் உச்சம்.

ந.பெரியசாமி said...

நல்லா வந்திருக்கு நண்பா