அஞ்சலி : எழுத்தாளர் எம்.ஜி.கன்னியப்பன்... உங்கள் வண்டி கிளம்பிவிட்டது!
எம்.ஜி.கன்னியப்பன்
நான் 'கல்கி'யில் வேலைபார்த்தபோது அங்கே எனக்கு சீனியராக வேலைபார்த்தவர் இயக்குநர் மு.மாறன். அவரது நண்பராகப் பழக்கமாகி எனது நண்பராகவும் நட்பில் இணைந்தவர்எம்.ஜி. கன்னியப்பன். சினிமா பாடலாசியர், வசனகர்த்தா, கதாசிரியர்... என சினிமாவின் கிரியேட்டிவ் பக்கம் இயங்கியவர். நா.முத்துக்குமார், லலிதானந்த், குகை மா புகழேந்தி, கன்னியப்பன்... எல்லாம் ஒரு குழாம். நா.முத்துக்குமார் தூர் கவிதை மூலம் கவனத்துக்கு வந்ததுபோல, கன்னியப்பன், குமுதத்தில் எழுதிய கூட்டுக்குடும்பத்தில் கலவி குறித்து எழுதிய ஒரு கவிதை மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தவர். பாக்கெட் நாவல் காலத்தில் எழுதவந்து எல்லோரையும் அனபையும் எழுத்தின் மூலம் பெற்றவர். தனி இருக்கை இவரது சிறுகதைத் தொகுப்பு, நான்குக்கும் அதிகமான கவிதைத் தொகுப்பும் எழுதியிருக்கிறார். நிறைய சினிமா கதைகளுக்கு ஸ்கிரிப்ட் டாக்டராக வேலைபார்த்தவர். பத்து நாட்களுக்கு முன்பு எனது நண்பர் இயக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எழுத்தாளராக கன்னியப்பனைச் சிபாரிசு செய்தேன். கன்னியப்பன் எழுத்தை அங்கே அனைவருக்கும் பிடித்துவிட்டது. அதை மகிழ்ந்து பேசினார். இப்போது அதிர்ச்சி செய்தியாகிவிட்டார். சென்னையில் எனது ஆரம்ப நாட்கள் முதல் இருந்துவந்தவர், இப்போது இல்லாமலாகிவிட்டார். உடல் அவரது சொந்த ஊரான சேலம் (அருகில் ஒரு கிராமம்) நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அஞ்சலி தலைவரே. உங்கள் வண்டி கிளம்பிவிட்டது!
No comments:
Post a Comment