19 March, 2012

சலனித்தல்


தண்ணீரைத் துளைத்துத் தொங்கும் தூண்டிலில்

துடிக்கும் புழுவை

முள்ளில் மாட்டிக்கொள்ளாமல்

கவ்வி இழுப்பதுபோன்ற கனவிலிருந்த சினை மீன்,

கொத்தித் தூக்கிய கொக்கின் தொண்டையில்

இட வலமென அசைகிறது முள்ளாய் மாறி

அடிமேல் அடிவைத்து வெள்ளையாய்ச் சலனிக்கிறது

உறைந்திருந்த காலம்

3 comments:

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

கீதமஞ்சரி said...

கொக்கின் வாய்க்குள் சினைமீனின் முயற்சி வெற்றியா தோல்வியா? விடையறியுமுன்னரே உறைந்துவிட்ட காலம் பதைக்கவைக்கிறது மனதை. அருமையான கவிதை.

உமா மோகன் said...

ஒன்றைக் கொன்று ஒன்று வாழும்
வாழும் ஒன்றை வந்து ஒன்று கொல்லும்