13 June, 2011

உயரம்

நேற்று...
இப்பெருமலை சிகரத்து உயரம்
அடிவாரத்தில் களைப்பாறும்
இந்தப் பறவையின்
பாதங்கள் கீழிருந்தது


12 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

ரிஷபன் said...

கவிதையும்.. உயரம்!

Thenammai Lakshmanan said...

ஆமாம் ஆச்சர்யம்தான்..:))

குமரி எஸ். நீலகண்டன் said...

கவிதை களைப்பாறும் பறவையைப் போல் மனதை உயரேப் பறக்க வைத்தது.

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமை...

நிலாமகள் said...

சிற‌குக‌ள் சாத்திய‌மாக்குகின்ற‌ன‌ ப‌ற‌வையின் உய‌ர‌த்தையும் அடிவாரத்தையும் நிர்ண‌யிப்ப‌தில். குறைந்த‌ வ‌ரிக‌ளும் வார்த்தைக‌ளும் பிர‌ம்மாண்ட‌ சிந்தை கிள‌ர்வைத் த‌ருகின்ற‌ன‌.

ச.முத்துவேல் said...

very simple.but, leads to deep thinking.

கதிரவன் said...

என்ன புரிந்தது உங்க ஏழு பேருக்கும்... எனக்கு விளக்கமாக சொல்லுங்கள்...

நிலாமகள் said...

கதிரவன்said...
என்ன புரிந்தது உங்க ஏழு பேருக்கும்... எனக்கு விளக்கமாக சொல்லுங்கள்...

நேற்று...
இப்பெருமலை சிகரத்து உயரம்
அடிவாரத்தில் களைப்பாறும்
இந்தப் பறவையின்
பாதங்கள் கீழிருந்தது

ப‌ற‌வைக்கு சிற‌கிருப்ப‌தால் நேற்று ஒரு பெரும‌லையின் சிக‌ர‌ம் வ‌ரைப் ப‌ற‌ந்து அம‌ர்ந்த‌து. திரும்ப‌வும் ப‌ற‌ந்து அடிவார‌ம் வ‌ந்து க‌ளைப்பாற‌ இப்ப‌ற‌வைக்கு ஒரு நாள் போதுமான‌தாய் இருக்கிற‌து. ப‌ற‌வையின் பாத‌ங்க‌ள் சிக‌ர‌த்தின் மேலிருப்ப‌தும் அடிவார‌த்தின் கீழிருப்ப‌தும் சிற‌குக‌ளால் சாத்திய‌ப்ப‌டுகிற‌தென‌க் கொள்ள‌லாம். இதை ந‌ம‌க்கும் பொருத்திப் பார்க்க‌லாமே... ந‌ம‌து இல‌ட்சிய‌ங்க‌ளை சிக‌ர‌மென‌க் கொண்டால் முய‌ற்சியும் நேர்வ‌ழியும் சிற‌குக‌ளாகி உழைப்பின் ப‌ல‌னால் ஒரு நாள் அடைய‌ முடியும்.

வேறு கோண‌த்தில் க‌னிமொழியைப் போன்ற‌ அர‌சிய‌லார்க‌ளையும் பொருத்திப் பாருங்க‌ளேன் இக் க‌விதையோடு.

அவ‌ர‌வ‌ர் ம‌ன‌ப்போக்கில் ப‌ல‌ பொருள்த‌ரும் இல‌க்கிய‌ நுக‌ர்வை ப‌யிற்சியாலும் அனுப‌வ‌த்தாலும் கைக் கொள்ள‌ முய‌ல‌ வேண்டியிருக்கிற‌து. க‌திர‌வ‌ன், இக்க‌விதை ஏன் புரியாம‌ல் போகிற‌து உங்க‌ளுக்கு... சொல்லுங்க‌ளேன். க‌திர்பார‌திக்காக‌ வெற்றுக் கைத‌ட்ட‌ல் ஏழு பேரும் த‌ட்டிய‌தாக‌ எண்ணிவிட்டீர்க‌ளா...? புரிந்தாலும் பிடித்தாலும் தான் பின்னூட்ட‌மிடுவ‌து பெரும்பாலான‌ ப்ளாக‌ர்க‌ளின் வ‌ழ‌க்க‌ம். நான் அப்ப‌டித்தான். இது ஃபேஸ் புக், டிவீட்ட‌ர் அல்ல‌!

ராமலக்ஷ்மி said...

//புரிந்தாலும் பிடித்தாலும் தான் பின்னூட்ட‌மிடுவ‌து பெரும்பாலான‌ ப்ளாக‌ர்க‌ளின் வ‌ழ‌க்க‌ம்.//

இதில் நானும்.

கதிரவன் said...

திருக்குறள் ஒன்னறை அடியாகவே இல்லாமல் விளக்கவுரையான பின்புதான்
உலகளவில் விரிந்தது.
உங்களது கவிதைகளும்
விளக்கவுரையாக இல்லாவிடினும்
இலக்கியறிவு இல்லாதவனுக்கும்
புரியும்படியாக இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம்.

நிலாமகள் said...

@கதிரவன்...

பெரும்பாலான‌ ந‌வீன‌ க‌விதைக‌ளின் பூட‌க‌மான‌ இருண்மைத் த‌ன்மையில் என‌க்கும் அதிருப்தியுண்டு. ப‌ஃபே சிஸ்ட‌த்தில் உண‌வ‌ருந்த‌ வாய்ப்பெனில் ந‌ம் வ‌யிற்றுக்கு ஒத்துக்கொள்ளத் த‌க்க‌, நாவ‌றிந்த‌ சுவையில் உள்ள‌வ‌ற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள் முடியும் தானே...
ச‌ங்க‌கால‌ச் செய்யுள்க‌ளை ஒப்பிட்டால் பொழிப்புரை தேவைய‌ற்று பெரிதும் பெரும்பாலோனோரை சென்ற‌டைந்த‌ எளிமை திருக்குற‌ளில் ஏராள‌மாயிருக்கிற‌து.

மீடியாவிலிருக்கும் தாங்க‌ள் வ‌ன்ம‌ம் துளிர்க்காத‌ வார்த்தைக‌ளில் உரிமையுட‌ன் கேட்க‌லாம் எவ‌ரையும். ந‌ட்பும் அன்பும் சாத்திய‌மாக்காத‌து எது?!

தோழ‌ர் க‌திர்பார்தியின் ப‌ழைய‌ ப‌திவுக‌ளை ஒரு பார்வையிடுங்க‌ள் ச‌கா... உங்க‌ளுக்கு உவ‌ப்பான‌வையும் அவ‌ற்றில் ஒளிந்திருக்க‌லாம்! ஒலி விளையாட்டு, சிற‌குக‌ளின் வ‌ழியே, ப‌ட‌ர்த‌ல், க‌பில‌ன் சொன்ன‌ க‌தையும் சொல்லாத‌ செய்தியும், இள‌ஞ்சூடாய் ஒரு ம‌ழை முத்த‌ம், க‌ண் பேறு, விளையாட்டு, கார‌ண‌ம் க‌பில‌னில்லை, ஆயினும் ஆறுத‌ல்... என‌ என‌க்கொரு நீண்ட‌ ப‌ட்டிய‌லுண்டு அவ‌ரிட‌ம்...