யவ்வனம் சொட்டும் அவள் பார்வையில்
ஒரு குளம் விரிகிறது
வழுக்கும் பாசிகளிலிருந்து
ஒரு பச்சை தேவதை எழும்புகிறாள்
மேனியெங்கிலும் வழிந்து பரவுகிறது
மகரந்தக் காடு
தாழ்ந்துயரும் அவளது பருவ மூச்சு
ஒரு பட்டாம்பூச்சியாய்ச் சிறகசைக்க
உதிர்ந்து நகர்கின்றன
அந்தத் தேவதைத் துகள்கள்
இப்போது குளம் தேவதைக் குளமாக
தேவதையும் குளமாகி
மகரந்தமாய்த் ததும்பிக்கொண்டிக்கிறாள்
தாகம் போக்க குளத்திலிறங்கும்
அவன் கரைந்துபோகலாம்
ஒரு மகரந்த அலையில்
நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011
3 comments:
மகரந்தத்தினைக் குறியீடாக்கி நகரும் கவிதை அருமை சகோ.
குளம் தேவதைக் குளமாக
தேவதையும் குளமாகி
மகரந்தமாய்த் ததும்பிக்கொண்டிக்கிறாள் - அற்புதமான வரிகள் மிகவும் ரசித்தேன்
கரையெல்லாம் மகரந்தம்..:))
Post a Comment