28 June, 2011

பறவையின் பாடல்

எனக்குள் வேர்கொழித்து
பசிய அலை வீசும் வனத்தை
புகையிலைத் தேய்த்துருஞ்சும் உனக்குள்
எப்படியாகிலும் கடத்திவிட வேண்டும்
முதலில்

ஈரத்தைக் கொண்டு வர
வாய்க்கால் வெட்டினேன்
வெளிச்சத்திலும் கொஞ்சம் வெப்பத்திலும்
உயிர்கள் ஜனனிக்கும் ஆகையால்
அதனையும் செய்துவைத்தேன்
மகரந்தங்களைக் கடத்தும்வண்ணம்
வண்ணத்துப்பூச்சிகளையும் சிருஷ்டித்தேன்
வனத்துக்குக் கம்பீரமாய் இருக்குமென
மிருக செட்டைகளை உலவவிட்டேன்
பருவங்கள் சிலவும் வந்தன
எதுவும் உன் சுவரைத் துளைக்கவில்லை

எனினும் தெரியுமெனக்கு
வனத்தின் சல்லிவேர்களோடு
சிலவிதைகளைக் கவ்வி வருகிற
பறவையின் பாடலொன்றே போதும்

5 comments:

'பரிவை' சே.குமார் said...

Kavithai romba nalla irukku...

பனித்துளி சங்கர் said...

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் நண்பரே . அழகான வார்த்தை அலங்காரம் . வாழ்த்துக்கள்

rvelkannan said...

முதல் பத்தியும் இறுதி பத்தியும் இருவேறு கவிதைகளாய் தோன்றுகிறது
சமீப காலத்தில் பறவைகளை அதிகம் அவதானிப்பு செய்றீங்கன்னு நினைக்கிறன்
அருமை வெளிப்பட்டு இருக்கு இந்த கவிதையிலும்

Anonymous said...

hi y did u send me a sms????

இராஜராஜேஸ்வரி said...

சிலவிதைகளைக் கவ்வி வருகிற
பறவையின் பாடலொன்றே போதும்//

சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.