மம்மி... டாடி...
ரெண்டு பேரும் சண்டை போட்டீங்க
லாலிபாப்பை வாயில திணிச்சுடுவேன்
என்னைத் திட்டுனீங்க
உங்களை பஃப்ஃபல்லோவா மாத்திடுவேன்
மூனரை வயதுக்கு வளர்ந்துவிட்ட
கபிலனின் கடும் எச்சரிக்கையைப்
பொருட்படுத்தாததால்
இப்போது இரண்டு பஃப்ஃபலோக்கள்
ஒரு லாலிபாப்பைச் சுவைக்கும்
சாபத்தில் இருக்கின்றன
5 comments:
அருமை .. அருமை கதிர்பாரதி சார்..
ரசித்து வாசித்தேன் உங்கள் கபிலனின் குறும்பையும் , உங்கள் குறும்பையும் .. நல்ல கவிதை
superb! :-))
:-))
lalipoppinsabam kavithai padiththen nalla kavithai.manathil"pach' endru ottikkondathu.paarattukkal
Post a Comment