1
முன்மாலைக்கும்
பின்மாலைக்கும் இடையே
மிதவேகத்தில் செல்கிற ரயில்
ஒரு புள்ளியாகி மறைகிறது அந்திச் சிவப்பில்
பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்
பயணிக்கிற
அவளின் முலைகளை
தாலாட்டி தாலாட்டி
2
நிச்சலனமுற்று
இருந்த தெப்பக்குளத்தில்
கொத்துக்கொத்தாய்
பார்வைகளை அள்ளி
வீசிவிட்டு வந்துவிட்டாள்
சலனமுற்ற மீன்களில் சில
நீந்திக்கொண்டிருக்கின்றன
அவனது ஈசான மூலையில்
3
இரவு தளும்பிக்கொண்டு
இருக்கிற குளத்தில்
நெளிந்துகொண்டு
இருக்கிற பௌர்ணமியை
கொத்தும் கொக்கு
றெக்கை விரிக்க
நிலவு பறக்கிறது
நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011
7 comments:
1, ரொம்ப நல்லாயிருக்கு
கொக்கு
றெக்கை விரிக்க
நிலவு பறக்கிறது
கூடவே எங்கள் மனசும்...
கவிதைகள் நன்று. மூன்றாவது மிக அழகு.
நல்ல கவிதைகள். கொக்கும் நிலவும் மனதில் றெக்கை கட்டிப் பறக்கின்றன...
எல்லா குளங்களிலும் இரவுகள் தழும்பிக் கொண்டேதான் இருக்கின்றன பாரதி. நிலவுகளும் நெளிந்து கொண்டேதான் இருக்கின்றன. என்ன ,பாரதியின் கவிதைகளுக்குள் எனில் அவை ரொம்பவும் அழகாய்.
உங்கள் வலையின் முகவரியை எனது வலையின் முகப்பில் வைத்து விட்டேன். இனி அவ்வப்போது தொடர்ந்து பார்க்கலாம்
நன்றி, நல்லாயிருக்கு
Post a Comment