22 November, 2010

வாழ்ந்து கெட்ட சாவி

எடுத்ததும் முதலில் சட்டைப்பையிலும்
பிறகு சுவற்றின் ஆணியிலும்
கனத்துத் தொங்குகிறது
வாழ்ந்து கெட்ட குடும்பத்தின்
மனசில் ஆழ்ந்து கிடக்கும்
சோகத்தைப் போல

யாரோ நழுவவிட்டு
தெருவில் என் கைசேர்ந்த
வீட்டுச் சாவி

நன்றி: புன்னகை -காலாண்டிதழ்

3 comments:

நிலாமகள் said...

சாவி தொலைச்சவங்க யாராவது இந்த கவிதையை பார்த்தால் ஒரு எட்டு உங்க வீட்டுக்கு வரலாமா?!

உயிரோடை said...

தலைப்பே ரொம்ப நல்லா இருக்கு

அப்பாதுரை said...

நன்று.