அப்படிச் செய்கிறவனுமில்லை
உங்கள் வடிவங்களில்
தேங்க இயலாமல் கசிந்தான்
அப்போதே சஞ்சலத்தை
மறைக்கச் சிரமப்பட்டீர்கள்
உங்கள் வார்த்தைகளுக்கு
வளைதல் செய்யும் லாகவமற்று
ஒடிந்ததில் குமைந்து
அசூசைக் கொண்டீர்கள்
நீங்கள் வாரி இறைத்த
நிறங்களைப் பதட்டத்தோடு அதீதமாய்ப்
பூசிக்கொண்டதில்
கடைவிழியில் அன்னியப்பட்டான்
உங்களின் தீவிரத்தில்
ஆழவும் முடியாமல்
கலக்கவும் இயலாமல்
அவன் திணறுதலில் கலக்கமுற்ற நீங்கள்
அயலானிடம் சொல்லிப்போகிறீர்கள்
''அவனிடம் ஜாக்கிரதை"
நன்றி: கல்கி(05.09.10)
4 comments:
கவிதை நல்லா இருக்கு
பழகுவது கத்தியில் நடப்பதாகிவிட்டது. நுட்பமான விடயத்தைத் தொட்டிருக்கிறீர்கள். 'அவளிடம் ஜாக்கிரதை'என்று யாராவது சொல்லியிருப்பார்களா? என்று நினைத்துப் பார்க்க வைத்தது.
வழக்கம் போல உங்கள் சொல்லாடல் உங்கள் கவிதைக்கு கிரீடம் . நம்மைப் பற்றிய மதிப்பீடுகள் இப்படியாக உணரப்படதவர்களின் ஒற்றை விமர்சனமாகவே இருந்துவிடுகிறது. கவிதைகள் எப்படி வாசிக்கப்படாமலேயே கழுவேற்றப்படுகின்றனவோ அப்படியே சில மனிதர்களும் எடை போடப் படுகின்றனர் அருமையான கவிதை

Post a Comment