துறுதுறுவென நடுநிசிவரைக்கும்
தன் விளையாட்டை
நீட்டித்துக்கொண்டிருக்கும் மகனை
தூங்கலைன்னா டைனோசர் வந்து
தலையைக் கடுச்சுடும் கண்ணா
தூங்கு தூங்கு என
வாயைப் பிளந்து பிளந்து
மகனின் தலையைக் கடிப்பதுபோல
பாவனைக் காட்டுகிற அப்பா
ஒரு கணத்தின் முடிவில்
தூக்கத்தில் ஆழ்கிற மகனுக்கு
டைனோசராகிப் போகிறார்
4 comments:
உங்க முகத்தை பார்த்த பின் கதையே தேவையில்லை பாரதி..பாவம் பச்ச புள்ள!!!
அருமை:)!
பிரமாதம். குழந்தை மனவியலை அருமையாகப் படம்பிடித்தக் கவிதைக்குப் பாராட்டுகள்.
யதார்த்தமான வரிகள் சார்
Post a Comment