கால் புதைய கனிந்திருக்கும்
அந்த நிலத்தின் அந்தரங்கத்துள்
புதைத்து வைத்திருக்கிறான்
புத்தன் தன் கனவினை
கிளைகளற்ற தருவாக
காய்த்து இறுகிய மலையாக
குளிர்பொருந்திய ஊற்றாக
விடம் கக்கும் பாம்பாக
மேலும் எதுவாகவும்
வெளிப்படலாம் எதிர்பாராதருணத்தில்
கனவுக்கும் புத்தனுக்குமான இடைவெளியில்
ஏக்கம் தொனிக்கக் காத்திருக்கிறது
சலனிக்காத கர்ப்பக் குளத்து இரவு
நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011
3 comments:
நல்ல கவிதை.
//எதுவாகவும்
வெளிப்படலாம் எதிர்பாராதருணத்தில்//
அருமை.
//எதுவாகவும்
வெளிப்படலாம் எதிர்பாராதருணத்தில்//
காத்திருப்பு புத்தனை புரிய வைக்கிறது
அருமை கதிர்,
விடம் கக்கும் பாம்பாக..?? ஏன்..கதிர்
Post a Comment