14 April, 2011

எலி

பற்றி எரியும் புராதன நகரமென
தகிக்கும் தீயுடல்
ஜ்வாலை தாளாது
எலியின் சாயல்பூசி அங்கிங்கெனப்
போக்கிடமற்று மோதிச் சிதைகிற
ஏதோவொன்று
உன் பருவம் மிழற்றும்
இசையின் நீர்மையில் தணிகிறது
தாப விமோசனமாய்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

3 comments:

Thenammai Lakshmanan said...

பருவம் மிழற்றும் இசையின் நீர்மை..

இதில் ஏதும் தணிய முடியுமா என்ன..? இருந்தும் நல்லா இருக்கு கவிதை.. இயல்பான வெளிப்பாடு..

கதிரவன் said...

நீயும் கமலும் ஒண்ணு. அவர் நடிக்கும் படம் புரியாது. நீ எழுதுற கவிதை புரியாது...

குமரி எஸ். நீலகண்டன் said...

தணியாத் தாபம் தளர்கிறது தற்காலிகமாய்...நல்ல கவிதை