நாற்புறமும் எழும்பி நிற்கும் சுவற்றின்
சிறு வாயில் வழி உள்நுழைந்து
ஒலியை விசிறி எறிவதும்
அது எதிரொலித்துத் திரும்புகையில்
குதூகலிப்பதுமாய் விளையாடுகிறான் திலீபன்
அண்ணனின் விடுமுறை கழிக்க
அண்ணனோடு திலீபன் ஊருக்குச்
சென்றிருக்கையில்
அவனின் ஒலிவிளையாட்டை
அப்பா ஆட ஆரம்பித்திருந்தார்
இருபத்தெட்டு வயதான ஒலி
எதிரொலித்துத் திரும்புகையில்
ஒண்ணே முக்கால் வயதாயிருந்தது
நன்றி: புன்னகை -காலாண்டிதழ்
7 comments:
arumaiya irukku :-)
ரொம்ப நல்லாருக்கு கதிர்பாரதி சார்! :-)
எவ்வளவு அருமையாய் இட்டு நிரப்பி விட்டீர்கள், இல்லாமையை! அது சரி, இல்லாமை என எதுவும் இருக்கா என்ன?
ஊரில் கபிலனும் திலீபனும் அப்பா ஆனார்கள்... கையில் கம்புடன் தாத்தாவை மிரட்டும் ஒலியில் தாத்தாவின் அறுபது வயதும் ஆறாய் கரைந்தன. கபிலன் கவிதை சொன்னான். திலீபன் அதற்குள் திரைக்கதை சொன்னான். தாத்தா வாயில் லாலிபாப்புடன் சர்க்கரையாய் மிதந்து கொண்டிருக்கிறார்
ஒலிக்கு வயது கிடையாது அம்மாவின் குழந்தை போல
இருபத்தெட்டுக்கும் ஒண்ணே முக்காலுக்கும் இடையில் ஓடும் நதியின் கரைகள் ஒன்றோடொன்று தொட்டுக் கொண்டது போல் இருந்தது.
ஊரிலிருந்து திரும்புவதற்குள் திலீபனுக்கு இன்னொரு ஊதல் வாங்கி வைத்திடலாம்... திரும்பிய பால்யம் நிலைத்திட... குமரியார் மேலும் நிரப்பி விட்டார்... குழந்தைகளோடு இருப்பது குழந்தைகளாய் இருப்பதைக் காட்டிலும் கும்மாளமானதாய்...!
எக்கோ என்பதை இப்படியும் சொல்ல முடியுமா..:))
Post a Comment