10 March, 2011

இருள்தான் எரிந்துகொண்டிருந்தது

ஒளி வருவதற்கு முன்பிருந்தே அந்த அறைக்குள்
இருள்தான் எரிந்துகொண்டிருந்தது
ஒளி வருவது புலனானதே இருளால்தான்

ஒளி வேட்டை மிருகத்தின் சாயலில்
இருளைக் கடித்துத் தின்னத் தொடங்கியபோது
கருப்பாய்ச் சொட்டிக்கொண்டிருக்கும்
இருளின் ரத்தத்தை உறிஞ்சுகிறது அதன் திரி

இருளிலிருந்து உயிர்கொண்ட ஒளியிலிருந்து
தன் புன்னைகையைச் சரிசெய்கிறான் சிவன்

பின்பு சிவனே இருளாகி அவனே ஒளியாகிறான்
அவனொளியில் ஒளிர்கிறது உலகம்

இருளே ஒளியாகி ஒளியே சிவனாகி
சிவனே உலகாகி உலகே இருளாலானால்
இருளே சிவனல்லவா

எல்லாம் இருள் மயம்

4 comments:

குமரி எஸ். நீலகண்டன் said...

சர்வமும் சிவமயம்.... எல்லாம் ஒன்றுதான். எதுவாக அதை நினைக்கிறோமோ அதுவே அந்த ஒன்று. இருளின் இழைகளிலிருந்து நீங்கள் நெய்த பளபளப்பான பட்டு மகத்தானது.
குமரி எஸ். நீலகண்டன்

'பரிவை' சே.குமார் said...

Nalla Kavithai... romba nalla irukku....

sakthi said...

அபாரம் கதிர் பாரதி

உயிரோடை said...

எல்லாம் இருள் மயம் உங்க வலைப்பக்கத்தின் பிண்ணணி நிறம் போல. கருப்பு கலரை மாத்துங்க சார் கண்ணை அரிக்குது