26 February, 2011

சிறகின் வழியே

மருத்துவமனையிலிருந்து துவண்ட நாற்றென
ஆயாவை வீட்டுக்கு ஏந்திவரும்
அந்தப் புளியமரத்து முடுக்குப்பாதையில்
தலைகுப்புற அசைவற்றுக் கிடந்த
வண்ணத்துப்பூச்சியை இழுத்துப்போகின்றன
கொலைக்கரம் வாய்த்த எறும்புக் கூட்டம்

காற்றுத் தொகுதி ஆராதித்துக்கிடந்த
அதன் வண்ணச் சிறகளிலிருக்கும்
நான்கைந்து ஓட்டைகளின் வழியே
வெளியேற முடிவு செய்துவிட்டது
ஆயாவின் உயிர்


6 comments:

உயிரோடை said...

கவிதை பிடித்திருக்கிறது

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு சார்!

கோநா said...

கதிர், எடுத்துச் செல்லும் எறும்பின் கால்களை கரங்களாக பார்த்த உங்கள் பார்வை நியாயமானது, ஆனால் இதுவரை யாரும் பார்க்காதது. புதுமை

குமரி எஸ். நீலகண்டன் said...

ஆயாவை பகட்டான பட்டாம் பூச்சியாய் பார்க்கிறேன். அதன் வண்ணங்களில் அவளின் எண்ணங்களைப் பார்க்கிறேன்..
நல்ல கவிதை..

'பரிவை' சே.குமார் said...

நல்லாருக்கு சார்.

நெய்வேலி பாரதிக்குமார் said...

நல்ல கவிதை .. எறும்புகளின் கொலைக்கரங்களில் அகப்படுவதைவிட வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள் வழியே உயிர் போவது ஆயாவுக்கு மோட்சம் தானே ...