மக்கிக்கெட்ட குப்பைகளைக் கிளறி
இங்கிதம் குலைந்து எல்லா இடத்தும்
புணர்ந்து தொலைத்து
குட்டிச் சுவமீதேறி கொக்கரிக்கும் கோழிகள்
உறுத்தல் உதறி சுவைத்து அலைகின்றன
எச்சச் சொச்சங்களை
ஒன்றுக்கும் உதவாதிருத்தல்
ஊர்ச்சுற்றித் திளைத்தல்
புழுதிக் குடைந்தாடி
போதையில் மிதத்தல்...
என்றாயிற்று கோழியின் குணங்கள்
சண்டைக்கோழி, அடைகோழி
வெடக்கோழி, பிராய்லர் கோழி
வகைப்படுத்தலாம் கோழிகளை
எனினும்
மனிதனைக் காவுகொண்டபடிக்கு
பம்மிபம்மி வந்துபோகும்
சாமிக்கென நேர்ந்துவிட்ட கோழிகளை
கோழிகளென ஒத்துக்கொள்ள
மறுதலிக்கிறான் ஜீவானந்தம்
2 comments:
தம் இனமனைத்தையும் காவு கொள்ளும் மனித இனத்தை பழிவாங்கும் முகமாய் பம்மிப் பம்மி வரும் அக் கோழியை வதம் செய்யும் அவதாரமென கோயில் கட்டியா கும்பிடுவோம்... யார் வயிற்றுக்கோ தானே அதுவும்!!
கவிதை நல்லா இருக்கு
Post a Comment