உன்னழகின் இருப்பின்
சாநித்தியத்தோடே ஒளிர்கிறது
நீ கைவிட்டுச் சென்ற அறை
உதிர்ந்தவிழ்ந்த உன் வார்த்தைகளை
கொறித்துச் சதிராடும் ஜோடி அணில்கள்
துணுக்குறாவண்ணம் எட்டிப் பார்க்கின்றன
நிகழ்வின் சுகந்தங்கள்
உன் வெக்கையை ஆறவிடாமல்
வெட்கத்தோடு ஒதுங்கும் கதவை
இறுக்கித் தாழிட்டபோது
நிலா முற்றிய கீற்றுகளால் இம்சித்தது
வழமையாய்... விரிப்பின் கசங்களில்
தலையணையின் பிதுங்களில்
பெருநதியென பிரவகிக்கும்
உன் யவ்வனத்தைச் சுமந்துகொண்டு
திரும்பினேன் கோவேறு என
சூன்யத்தில் தொலைந்திடாதிருக்க வேண்டும்
திசைகள் குழம்பிய பாதைகள்
நன்றி: கல்கி (02.01.2011)
2 comments:
கவிதை நன்றாக இருக்கின்றது
வார்த்தை கோர்வையில் அழகிய் நதியாய் பாய்ந்து பரவசப்படுத்துகிறது உங்கள் கவிதை.
Post a Comment