16 September, 2012

சிதைந்து செங்குருதி ஆகுதல்

அடர்மழை தினமொன்றில்
நீ ஏற்காத
என் அலைபேசி அழைப்புகள்
கொட்டுகிற ஒவ்வொரு துளியையும்
திறந்து திறந்து பார்த்து 
உனைக் காணாமல் 
கலங்கி 
வீழ்ந்து 
சிதைந்து
செங்குருதியாக்குகின்றன 
தரையை.

7 comments:

Rasan said...

அருமை. தொடருங்கள்.

manichudar blogspot.com said...

வார்த்தைகளில் கனம் கூடிய வரிகள் குறைந்த கவிதை.!!!!!!

நிலாமகள் said...

இறுதி இரு வ‌ரிக‌ள் செம்ம‌ண்ணை மேன்மையூட்டுகின்ற‌ன‌... 'செம்புல‌ப்பெய‌ல்நீருக்கு' அப்புற‌ம்! அற்புத‌மான‌ க‌ற்ப‌னை!!

கதிர்பாரதி said...

நன்றி நிலாமகள்
நன்றி ஜெயஜோதி
நன்றி ரசன்

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் ரசிக்க வைத்தன...

கிருஷ்ணப்ரியா said...

பரவாயில்லையே கதிர்.... கருத்துக்களுக்கு நன்றி எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க.....
ஆனாலும் கவிதை ரொம்ப அருமை தாங்க.... பாராட்டுக்கள்

உயிரோடை said...

அடர் மழை தொடர் மழை இதெல்லாமே பிரச்சனை தான்