29 October, 2011

திலீபன் வைத்த கொலு

தன் முதுகில் வெளிமானைச் சுமந்துகொண்டு

புல் மேயவும் தயாரென்பது போல இருக்கிறது புலி

பசுமாட்டின் நிழலில் சிங்கம் இளைப்பாறிக் கொண்டிருந்தது

கரடியும் குரங்கும் முகத்தோடு முகமுரசிக்

விளையாடும் பாவனையில் இருந்தன

காந்தியின் கையில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு

புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்

வேட்டைக்காரன் ஒருவன்

காட்டெருமை ஒன்று தாயின் கரிசனத்தோடு

ஓநாய்க்குட்டியை நாவால் தடவிக்கொடுக்கிறது

ஆசியர் பொம்மைக்குப் பாராமுகமாய் நிற்பது

யூகேஜி போகும் கபிலனாகத்தான் இருக்க வேண்டும்

தவயோகி ஒருவர் நடனமாதரில் லயித்திருக்க

தலையை ஆட்டி ஆட்டிச் சிரிக்கிறது

தலையாட்டிப் பொம்மை


3 comments:

'பரிவை' சே.குமார் said...

எதார்த்தம் நிறைந்த அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.

நிலாமகள் said...

அட்ட‌காச‌மான‌ கொலு! திலீப‌னுக்கொரு பூச்செண்டு!!

Thenammai Lakshmanan said...

ஆமாம் அட்டகாசமான கொலு.. நிறைவாய் இருந்தது..:)