16 May, 2010

பிழைப்பு

ஈரமற்று கானல் ஓடும் நதியில்
மூர்ச்சையுற்று மிதந்த பால்யத்தை
சுமந்துவந்து கண்ணம்மாபேட்டையில்
எரிக்கையில் துளிர்த்த வியர்வையில்
சற்றே உப்பு கரிக்கிறது பிழைப்பு

நன்றி: கல்கி(04.07.2010)

3 comments:

உயிரோடை said...

உங்களுடைய மற்ற கவிதைகளிலிருந்து வித்தியாசபடுகிறது.

நேசமித்ரன் said...

கறிக்கிறது ?

கரிக்கிறது!

நல்லா இருக்குங்க சார்

www.eraaedwin.com said...

ஆமாம் கதிர்,

வறண்டும் வெடித்தும்
கானல் கானல் கானலென்று
இன்மையை காட்டியே பால்யத்தை கொல்லும்
ஆனாலும் வியர்வையும் அதன் சாரமாய் கசியும் உப்பின் கரிப்பும்தான் நம்மை உந்தி இயக்கும்.
பிரச்சாரத்தின் எந்தத் தனமும் உள்ளே நுழையாமல் மிகுந்த கவனத்தோடு நெய்யப் பட்ட நம்பிக்கைப் பிரச்சாரம்.
அருமை கதிர்.